தேயிலை உற்பத்தியில் சிறந்து விளங்கும் நீலகிரியில் கிரீன் டீ, ஆர்த்தடாக்ஸ் டீ, கிரீன் லீவ்ஸ், சில்வர் டிப்ஸ் போன்ற பல்வேறு வகையான சிறப்பு தேயிலைத் தூள்கள் தயாரிக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தேயிலை தொழிற்சாலைகள் மட்டுமல்லாது 120 தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இங்கு இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூளானது குன்னூரில் உள்ள தேயிலை ஏல மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சர்வதேச ஏல முறையில் ஏலம் விடப்படுகிறது.
தற்போது ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த சர்வதேச ஏலத்தில் அண்மையில் பல்வேறு தேயிலை தொழிற்சாலைகளின் சிறப்பு தேயிலைத் தூள்கள் ஏலத்திற்கு வந்தன.
இதில் குன்னூர் அருகில் உள்ள தனியார் தேயிலை நிறுவனத்தின் `சில்வர் டிப்ஸ்' எனப்படும் ஒயிட் டீ அதிகபட்சமாக ஒரு கிலோ 16,000 ரூபாய்க்கு ஏலம் போனது. இது தென்னிந்திய அளவில் அதிகபட்சமாக கிடைத்த விலையாகும்.
Also Read: ஒரே நாளில் 6 லட்சம் கிலோ பசுந்தேயிலை கொள்முதல்; திணறும் நீலகிரி தொழிற்சாலைகள்; என்ன காரணம்?
இந்த சில்வர் டிப்ஸ் டீ உற்பத்தி குறித்து அந்த தேயிலை தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டபோது, ``அதிகாலையில் சூரிய ஒளி படுவதற்கு முன் தேயிலையில் படர்ந்துள்ள பனியோடு கொழுந்தைப் பறிக்க வேண்டும். பிரத்யேக இந்த டீயை தயாரிக்க சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 5 கிலோ நுனி பசுந்தேயிலை மட்டுமே கிடைக்கும். அவற்றை குறிப்பிட்ட வெப்பநிலையில் தொடர்ந்து பதப்படுத்தப்படுத்துவதன் மூலம் 5 கிலோ கொழுந்திலையில் 1 கிலோ `சில்வர் டிப்ஸ்' எனப்படும் ஒயிட் டீ கிடைக்கிறது. இதுதான் அதிக விலைக்கான காரணம்" எனத் தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/agriculture/nilgiris-silver-tipes-white-tea-auctioned-for-16400-a-kg-sets-new-record
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக