Ad

சனி, 26 ஜூன், 2021

கொரோனா சோதனை என மர்மநபர் கொடுத்த மாத்திரை: ஒருவர் பலி, சிகிச்சையில் 3 பேர் - ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகேயுள்ள கருங்கவுண்டன்வலசு, சேனாங்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி கருப்பண கவுண்டர் (வயது 75). இவர் மனைவி மல்லிகா (வயது 55) மற்றும் மகள் தீபாவுடன் (வயது 30) வசித்து வந்தார். நேற்று காலை சுமார் 8 மணியளவில் இவர்களது தோட்டத்திற்கு 25 வயதுடைய இளைஞர் ஒருவர் வந்துள்ளார். தான் கொரோனா சோதனை செய்ய வந்திருப்பதாகவும், சோதனைக்கு முன்பாக நான் கொடுக்கின்ற மாத்திரையை சாப்பிட வேண்டுமெனச் சொல்லி கருப்பு நிறத்திலான மாத்திரை ஒன்றை கொடுத்திருக்கிறார். நடக்கவிருக்கின்ற விபரீதத்தை அறியாமல் கருப்பண கவுண்டர், அவருடைய மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் தோட்டத்தில் வேலை செய்து வந்த குப்பம்மாள் (வயது 65) ஆகிய நால்வரும் அந்த மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டிருக்கின்றனர்.

சம்பவம் நடந்தபோது பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்னும் நபர் அருகில் இருந்துள்ளார். அவரிடமும் அந்த மர்மநபர் மாத்திரையைச் சாப்பிடச் சொல்லியிருக்கிறார். ‘நான் ஏற்கனவே கொரோனா சோதனை செய்துவிட்டேன்’ எனச் சொல்லி கல்யாணசுந்தரம் மாத்திரையை சாப்பிட மறுத்துள்ளார்.

நால்வரும் மாத்திரயை சாப்பிட்ட பிறகு, கொரோனா பரிசோதனை செய்வதைப் போல ஏதேதோ பாவ்லா காட்டிவிட்டு ‘உங்களுக்கு கொரோனா தொற்று இல்லை’ எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். மர்மநபர் கிளம்பிச் சென்ற சில நிமிடங்களிலேயே மாத்திரையை சாப்பிட்ட நால்வருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் வந்துள்ளது. உடனே உறவினர்கள் நால்வரையும் சென்னிமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதில் மல்லிகா மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மீதமிருந்த மூவரையும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கருப்பண கவுண்டர் மற்றும் அவருடைய மகள் தீபா ஆகிய இருவரையும் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர். குப்பம்மாள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மூவருடைய நிலைமையும் கவலைக்குரியதாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மல்லிகா

சம்பவம் நடந்தபோது பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்னும் நபர் அருகில் இருந்துள்ளார். அவரிடமும் அந்த மர்மநபர் மாத்திரையைச் சாப்பிடச் சொல்லியிருக்கிறார். ‘நான் ஏற்கனவே கொரோனா சோதனை செய்துவிட்டேன்’ எனச் சொல்லி கல்யாணசுந்தரம் மாத்திரை சாப்பிட மறுத்துள்ளார். மேலும், அந்த மர்மநபரை கல்யாணசுந்தரம் பைக்கில் அழைத்துச் சென்று ஊரின் மையப்பகுதியில் விட்டுவிட்டு வந்திருக்கிறார். இந்த நிகழ்வுகளை மையப்படுத்தியும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல். இச்சம்பவம் ஏதேனும் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு எதாவது காரணமா என்ற கோணத்தில் சென்னிமலை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/lady-killed-three-in-treatment-as-man-gives-tablet-as-corona-test

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக