Ad

ஞாயிறு, 27 ஜூன், 2021

`மதுரை கோட்ட ரயில்வேக்கு பெருமை’ - பாதுகாப்பு படை வீரர்கள் மூவருக்கு தேசிய அளவிலான விருது!

தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்தை சேர்ந்த 3 பாதுகாப்பு படை வீரர்கள் சிறப்பான சேவைக்காக தேசிய விருது பெற்று தங்கள் துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ஆறுமுக பாண்டியன்

சிறப்பாக பணியாற்றும் காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படையினருக்கு 2019-ம் ஆண்டு முதல் மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய அளவில் 'உட்கிரிஸ்டா சேவை விருது' மற்றும் 'அதி உட்கிரிஸ்டா சேவை விருது' என விருதுகளை வழங்கி வருகிறது.

இந்தாண்டு இந்த தேசிய விருதுகளுக்கு மதுரை ரயில்வே கோட்டத்தில் பணியாற்றும் 3 ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பாலசுப்ரமணியன்

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணிபுரியும் விசாகரன், செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணியாற்றும் ஆறுமுக பாண்டியன், திருச்செந்தூர் ரயில்வே பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணியாற்றும் பாலசுப்பிரமணியன் தேசிய அளவிலான 'உட்கிரிஷ்டா விருதுக்கு' தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணியாற்றும் விளையாட்டு வீரரான ஆறுமுக பாண்டியன், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், ரயில்வேதுறை குற்ற வழக்குகளை விரைவாக விசாரித்து சிறப்பாக பணி புரிந்துள்ளார்.

விசாகரன்

இவரைப்போலவே பாலசுப்பிரமணியம், விசாகரன் ஆகியோரும் தங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்துள்ளனர். இம்மூவரும் தேசிய விருது பெற்று மதுரை கோட்ட ரயில்வேக்கு பெருமை சேர்த்துள்ளதாக கோட்ட ஊடகத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/national-award-announced-for-madurai-divisional-railway-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக