Ad

சனி, 26 ஜூன், 2021

Covid Questions: அல்சர் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

அல்சர் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

- கலைக்கண்ணன் சிவஞானம் படையாட்சி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.செந்தில்நாதன்

அதிர்ஷ்டவசமாக கோவிட் தடுப்பூசிக்கும் அல்சர் பிரச்னைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே அல்சர் பிரச்னை இருப்பவர்கள், கோவாக்சின், கோவிஷீல்டு அல்லது ஸ்புட்னிக் என எந்தத் தடுப்பூசியை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.

தடுப்பூசி போட்டுக்கொள்வோரில் சிலருக்கு சருமத்தில் தடிப்புகள், வாய்ப்புண் போன்ற சின்னச் சின்ன பாதிப்புகள் வரலாமே தவிர, வயிற்றுப் புண்ணோ, வயிறு தொடர்பான வேறு பிரச்னைகளோ வருவதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. எனவே 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் பயமின்றி கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

மருத்துவர் பி.செந்தில்நாதன்

சிலர் ஏற்கெனவே அல்சருக்கான சிகிச்சையில் இருப்பார்கள். அவர்களும் சரி, சிகிச்சை முடிந்து குணமானவர்களும் சரி, தயக்கமின்றி கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டும்தான் மூன்றாம் அலையின் பாதிப்பிலிருந்து உங்களைக் காக்கும் என்பதால் தேவையற்ற பயத்தினால் அதைத் தள்ளிப்போடாமல் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/a-person-who-have-stomach-ulcer-can-take-covid-19-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக