மக்கள் நீதி மய்யம்: களமிறக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் யார்?
தேர்தல் தோல்வி்க்குப் பின் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளை கமல்ஹாசன் பதவி விலகச் சொன்னார். கட்சியை மறுகட்டமைப்பு செய்யப்போவதற்காகதான் இந்த முடிவு என சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த மருத்துவர் மகேந்திரன் உள்பட கட்சியிலிருந்தே சிலர் விலகினர். அப்போது கமல்ஹாசனும் அறிக்கை வழியாக தனது கருத்தைத் தெரிவித்தார். இந்நிலையில், இன்று கமல் ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று இணையவழி கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் தனது கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தன்னை இணைத்துக்கொண்ட நிலையில் அதன் நிர்வாகிகள் சிலருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது உறுதி. உள்ளாட்சிக்கு தன்னாட்சி என்கிற நோக்கத்திற்கான முதல் நகர்வு எனவும் கமல் ஹாசன் குறிப்பிட்டுள்ளார். பழ.கருப்பையா மற்றும் பொன்ராஜ் வெள்ளைச்சாமி இருவரும் அரசியல் ஆலோசகர்களாகவும், ஏ.ஜி மெளரியா துணைத் தலைவராகவும் ( கட்டமைப்பு), தங்கவேலு துணைத் தலைவராகவும் ( களப்பணி மற்றும் செயல்படுத்துதல்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தன்னை இணைத்துக்கொண்ட நிலையில் அதன் நிர்வாகிகள் சிலருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. சட்டப் பஞ்சயாத்து இயக்கத்தின் சிவ.இளங்கோவுக்கு மாநிலச் செயலாளர் (கட்டமைப்பு) பதவி வழங்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/tamilnadu-live-news-updates-on-26-06-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக