Ad

திங்கள், 4 ஜனவரி, 2021

`எண்ணம் போல் வாழ்க்கை' கௌதம், சிக்கலில் காயத்ரி... பாண்டிச்சேரியில் நடந்தது என்ன? #VallamaiTharayo

அந்த பார்ட்டி விளையாட்டு அபியைச் சங்கடப்படுத்திவிட்டதா என்று கேட்கிறான் கெளதம்.

அபி - கெளதம் உரையாடல் தொடங்குகிறது.

”இல்ல, நீங்க பேசினது ரொம்ப அழகா இருந்துச்சு. ஆனா, பிராக்டிகல் லைஃப்ல இதெல்லாம் சாத்தியமாகும்னு நினைக்கிறீங்களா? நம்மள சுத்தி இருக்கிறவங்களோட எண்ணம் இதில் குறுக்கீடு செய்யாதா?” என்ற அபியின் கேள்விக்கு,`நம் விருப்பத்தை நோக்கிச் சென்றால் முடியும் என்றுதான் நினைக்கிறேன்' என்கிறான் கெளதம்.

Vallamai Tharayo

“உங்க பார்ட்னரோட குறையைப் பார்க்காம எப்பவும் நடந்துக்க முடியுமா?” - இப்படிக் கேட்கிறாள் அபி.

“இல்ல, நான் எப்பவும் இப்படித்தான் இருப்பேன்னு சொல்றதைவிட, அப்படி நடந்துக்க முயற்சி செய்வேன்னு சொல்ல வரேன். `எண்ணம் போல வாழ்க்கை'னு சொல்வதை நம்பறேன். யாராலும் நூறு பர்சென்ட் நல்லவங்களா வாழ முடியாது. ஆனா, நூறு பர்சென்ட்டை எய்ம் வச்சாதான் அறுபது, எழுபது பர்சென்ட் நல்லவிதமா இருக்க முடியும்.”

அது சரி... கெளதம் உடனான சாதாரண உரையாடலில்கூட அபி ஏன் சீரியஸாகவே இருக்கிறார்?

”நீங்க எதுக்காக, யாருக்காக உங்களை மாத்திக்கணும்னு நினைக்கிறீங்க?” என்று அபி கேட்பதில் எந்த லாஜிக்கும் இல்லையே! ஆனாலும், கேட்டே விட்டாள்,

”எனக்குப் பிடிச்சவங்களுக்காக... என்னை ஒரு ஃப்ரெண்டைவிட அதிகமா நினைக்கிற உங்களைப் போல ஒருத்தருக்காக மாத்திக்கணும்னு நினைப்பேன்” என்று கெளதம் சொல்லவும் அபியின் முகத்தில் சந்தோஷம்.

Vallamai Tharayo

சித்தார்த் போன் செய்கிறான், ``வீட்டு நினைவு இருக்கிறதா, குழந்தைகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் உன்னால் எப்படி இருக்க முடிகிறது? போகும்போது விருப்பமே இல்லை என்று சொல்லிவிட்டுப் போனே... என்ன நடிப்பு'' என்று சொல்லிவிட்டு, வழக்கம்போலவே இணைப்பைத் துண்டிக்கிறான்.

குழந்தைகளை அவர்களின் அப்பாவிடம்தானே விட்டுவிட்டு வருகிறாள் அபி. பிறகு எதற்குக் கவலைப்பட வேண்டும்? பெண்கள் வீட்டிலிருக்கும்போது மட்டுமல்ல... அலுவலக நேரத்திலும்கூட வீட்டைத்தான் நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று இந்தச் சமூகம் எதிர்பார்க்கிறது.

அக்காவின் கணவர் தலைமுடிக்கு 'டை' அடிக்கும் வேளையில், அந்த வீட்டுக்கு பெயின்ட் அடிக்க ஒருவரை அனுப்புகிறான் சித்தார்த். இது அக்காவுக்கான வண்ணமயமான பொங்கல் பரிசு!

இரவு... அங்கே பாண்டிச்சேரியில் அடுத்த போன் ஒலிக்கிறது. காயத்ரியின் மகன் விளையாடும்போது தலைக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தகவல் வருகிறது. பதறும் காயத்ரிக்கு ஆறுதல் சொல்ல முயற்சி செய்கிறாள் அபி. அவளுக்கோ அந்த ஆறுதலை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை. கெளதம் மூலம் வண்டி ஏற்பாடு செய்யப்பட்டு அவள் கிளம்ப, பெனிடா பாரே கதியாக இருக்க, அபி தனியாக அறையில் இருக்கிறாள்.

இனி என்ன?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா



source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-review-for-episode-51

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக