Ad

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

`நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆக வேண்டுமா?’ - உங்களுக்காகவே ஒரு பயிலரங்கம்!

பேச்சுக்கலை... ஆகச்சிறந்த கலைகளில் முதன்மையானது. நாம் நேசிக்கும் அரசியல், சித்தாந்தம் எதுவாக இருந்தாலும், அதைப் பேச்சின் மூலமாகக் கடத்தும் லாகவம் நமக்குக் கைகூடிவிட்டால்... நூற்றுக்கு நூறு வெற்றியே! குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கவேண்டும் என்கிற நம் விருப்பம் நிறைவேறவும் பேச்சாற்றல் என்பது மிகமிக முக்கியமே!

தமிழ் மண்ணே வணக்கம்

அரசியல் மீதான ஆர்வம், சமூகத்தின் மீதான அக்கறை, இலக்கியங்கள் மீதான ஈர்ப்பு என்று இன்றைய தமிழ்ச் சூழலானது நெகிழவைப்பதாகவே இருக்கிறது. மேடைகள்தான் என்றில்லாமல், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என்று பலதரப்பட்ட வகைகளிலும் நம்முடைய பேச்சு அரங்கேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் கொட்டியே கிடக்கத்தான் செய்கின்றன.

நாமும் பேச்சாற்றல்மிக்கவராக விளங்கவேண்டும், பேச்சுத்திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் பலரிடமும் மேலோங்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது. இதை மனதில்கொண்டே இளைஞர்கள், இளைஞிகள், மாணவர்கள், மாணவிகள் ஆகியோர் தமது பேச்சாற்றலை வளர்த்தெடுத்துக் கொள்வதற்கான ஆகச்சிறந்த ஒரு களத்தை ‘ஜூனியர் விகடன்’ ஏற்படுத்திக்கொடுக்கிறது.

தமிழ் மண்ணே வணக்கம்

காணொலிப் பயிரங்கம் வாயிலாக அந்த வாய்ப்பு உங்களைத் தேடிவருகிறது. அரசியல், சமூகம், இலக்கியம், ஆன்மிகம், நகைச்சுவை என்று பல்வேறு வகையிலும் உங்களைப் பட்டைத் தீட்டிக்கொள்ள... இந்தப் பயிலரங்கம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையவிருக்கிறது.

பேச்சாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்த பயிற்சி மற்றும் ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க தமிழகத்தின் ஆகச்சிறந்த பேச்சாளர்கள் அணிவகுக்க இருக்கிறார்கள். ஜூனியர் விகடனின் ‘தமிழ் மண்ணே வணக்கம்! என்கிற தலைப்பிலான இந்தப் பயிலரங்கத்தின் முதல் நிகழ்வு, 06.02.2021 (சனிக்கிழமை) மாலை 6 - 7 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

நாஞ்சில் சம்பத்

முதல் நிகழ்வில், தமிழகத்தின் ஆற்றல்மிக்க பேச்சாளர்களில் ஒருவரான நாவரசர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று, பேச்சாற்றல் குறித்து பயிற்சி அளிக்கவிருக்கிறார். திராவிட இயக்கப் பேச்சாளரான இவர், பெரியாரிய சிந்தனையுடன் அரை நூற்றாண்டு காலம் தமிழகம் முழுவதும் மேடைகளில் முழங்கிவருபவர். அவரிடம் நேரடியாகப் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கி முன்பதிவு செய்துகொள்ளுங்கள்!

வாருங்கள்... உரக்கப் பேசுவோம், உண்மையே பேசுவோம்!

இதில் பங்கேற்க, கீழே உள்ள லிங்கில் பதிவு செய்துகொள்ளுங்கள்...

https://events.vikatan.com/197-tamil-manne-vanakkam/



source https://www.vikatan.com/literature/politics/online-event-regarding-public-speaking

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக