பிரபல ஆன்லைன் ஃபேஷன் தளம் மிந்த்ரா. ஜவுளிகள் மற்றும் பேஷன் பொருட்களை விற்கும் இந்த தளத்தின் லோகோ பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது எனப் புகார் எழ அதை தற்போது மாற்றியமைத்திருக்கிறது மிந்த்ரா.

அவெஸ்தா(Avesta) என்னும் தொண்டு அமைப்பைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் நாஸ் பட்டேல் என்பவர் மிந்த்ராவின் லோகோ நிர்வாண பெண் சாயலில் இருப்பதாக மும்பை சைபர் போலீஸில் புகார் அளித்தார். இதற்கு முன்பு இது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளிட்டிருந்தார். மிந்த்ரா லோகோ நீக்கப்படவேண்டும், அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் நாஸ் பட்டேல்.
Also Read: மிந்த்ரா முதல் ஆஜியோ வரை... டாப் 5 ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள்!
புகாரை விசாரித்த மும்பை சைபர் குற்றப் பிரிவு DCP ராஷ்மி கரண்டிகர், "மிந்த்ரா லோகோ பெண்களை இழிவுபடுத்துவதாகவே இருக்கிறது. இந்த லோகோ மாற்றப்பட வேண்டும் என மிந்த்ராவிடம் கேட்டிருக்கிறோம். மிந்த்ரா அதிகாரிகளைச் சந்தித்து இதுகுறித்து பேசியிருக்கிறோம். லோகோவை மாற்ற ஒரு மாதம் நேரம் கொடுத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
#RashmiKarandikar, DCP cyber cell, speaks about the complaint filed against #Myntra over 'derogatory' logo.
— Mid Day (@mid_day) January 30, 2021
Video Courtesy: @journofaizan #Mumbai #MumbaiNews #MyntraLogo pic.twitter.com/4wi9qlQGa4
இதையடுத்து லோகோவை மாற்றியமைத்திருக்கிறது மிந்த்ரா. இணையதளம் மட்டும்மல்லாமல் டெலிவரி பேக்கிங் வரை அனைத்து இடங்களிலும் லோகோவை மாற்றும் பணியில் தற்போது இருக்கிறது அந்நிறுவனம். ஃபிளிப்கார்ட்க்கு சொந்தமான மிந்த்ரா தளத்தில் சமீபத்தில் முடிந்த ‘End of Reason Sale'-ல் மட்டும் ஐந்து நாட்களில் 1.1 கோடி பொருட்களை விற்று இருக்கிறது. 2020-ல் 2019-ம் ஆண்டை விட விற்பனையில் 51% வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/technology/tech-news/myntra-changes-its-logo-after-a-complaint-calling-it-insulting-and-offensive-towards-women
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக