Ad

சனி, 30 ஜனவரி, 2021

சிசேரியன் குழந்தைகளுக்கு ஜாதகம் பலிக்குமா? - சக்திவிகடன் - கேள்வி பதில்கள்! #Video

இந்த நவீன காலத்தில் நம்மில் பலருக்கும் கேள்விகள் அதிகம் உள்ளன. ஆனால் பதில்கள் சொல்பவர்கள்தான் குறைவாக இருக்கிறார்கள். நம் பாரம்பர்யம், ஆன்மிகம், வழிபாட்டுமுறைகள், பழக்க வழக்கங்கள், சடங்குகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் சொல்ல நம் வீடுகளில் குடும்பப் பெரியவர்கள் இருந்தால் பரவாயில்லை. அப்படி இல்லை என்றால் யாரிடம் கேட்பது என்னும் கேள்வி அனைவரிடமும் உள்ளது.

நமக்கு பதில் தருபவர் அதை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். சந்தேகத்தை சாஸ்திரத்தின் துணைகொண்டு தீர்த்துவைப்பவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர்தான் சிவஶ்ரீ ஷண்முக சிவாசார்யர். காளிகாம்பாள் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வருபவர். தொடர்ந்து சக்திவிகடன் இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருபவர். சாஸ்திரப்பூர்வமான அவரது விடைகள் வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்றவை. சில வாசகர்களின் வேண்டுகோளின்படி தற்போது அந்தக் கேள்வி - பதில் பகுதியை வீடியோ வடிவிலும் விளங்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

தேர்ந்தெடுக்கப்படும் வாசகர்களின் கேள்விகளுக்கு சிவாசார்யர் வழங்கும் பதில்களை வீடியோவாகப் பதிவு செய்து வழங்க இருக்கிறோம். இதன்மூலம் வாசகர்கள் தங்களின் சந்தேகங்கள் தீர்வதுடன் சிவாசார்யரிடம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொண்ட அனுபவத்தைப் பெறலாம். ஒவ்வொரு வீடியோவிலும் நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்க இருக்கிறார்.

இந்த வீடியோவில் கீழ்க்கண்ட நான்கு கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் சிவாசார்யர்.

குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வழிபடுவது?

நெற்றியில் குங்குமம் மட்டும்தான் வைக்க வேண்டுமா... ஸ்டிக்கர் பொட்டுகள் வைக்கலாமா?

சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதகம் பலிக்குமா?

கோயிலுக்கு நேரதிரில் வீடுகட்டலாமா? அவ்வாறு அமைந்துவிட்டால் பரிகாரங்கள் உண்டா?

சக்திவிகடன் யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவினைப் பாருங்கள். உங்கள் கருத்துகளை அதில் பதிவிடுங்கள். உங்கள் கேள்விகளையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். மறக்காமல் சக்திவிகடன் யூட்யூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். புதிய வீடியோக்களைப் பற்றி அறிந்துகொள்ள பெல் ஐகானை அமுக்குங்கள். வரும் வாரங்களில் தேர்ந்தெடுக்கப்படும் கேள்விகளுக்கான வீடியோக்களை சக்திவிகடன் யூட்யூப் சேனலில் பாருங்கள்.

என்றென்றும் இறைப்பணியில் உங்கள் சக்திவிகடன்.



source https://www.vikatan.com/spiritual/gods/spritual-question-and-answers-by-shanmuga-sivacharyar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக