மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் நேற்று திறக்கப்பட்ட நிலையில் இன்று, அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக மற்றப்பட்டு இன்று திறக்கப்படுகிறது. முன்னதாக நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமு அறிவித்திருந்த நிலையில், அந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. வீட்டுக்கு புது வண்ணம் தீட்டப்பட்டு, பொருட்கள் வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்துவந்தன. அந்தப் பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டன.
Also Read: ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்... சிறப்புப் புகைப்படத் தொகுப்பு #SpotVisit
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, அவருடைய சகோதரர் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நினைவு இல்லத்தை திறக்க தடை கேட்டு அவசர வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் நேற்று, நினைவு இல்லத்தை திறக்க தடைவிதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. எனினும் வழக்கு முடியும் வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க முடியாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்தது. இதனை தொடர்ந்து நினைவு இல்லம் திறப்பு விழா திட்டமிட்டபடி இன்று நடைபெறுகிறது. நேற்று திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தை பார்வையிட உயர் நீதிமன்ற தனிநீதிபதி அனுமதி மறுத்த உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. `வேதா நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்ட இந்தமனு மீதான விசாரணை நாளை தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்பாக விசாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Also Read: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா: `மதுரைக்காரன் எதையும் வித்தியாசமா செய்வான்’ - செல்லூர் ராஜூ
source https://www.vikatan.com/news/general-news/vedha-nilaiyam-is-converted-into-memorial-house-wil-be-inaugurated-by-tn-cm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக