Ad

வியாழன், 28 ஜனவரி, 2021

புதிய கட்சி தொடங்கப் போவதாக அர்ஜுன மூர்த்தி அறிவித்திருப்பது பற்றி உங்கள் கருத்து? #VikatanPoll

அரசியலுக்கு வருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் தன் உடல்நலப் பிரச்னை காரணமாக அரசியலில் ஈடுபட முடியாது எனப் பின்வாங்கிவிட்டார். அவர் தொடங்கப்போவதாக அறிவித்திருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியும், மேற்பார்வையாளராகத் தமிழருவி மணியனும் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் அர்ஜுன மூர்த்தி, ஏற்கெனவே பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவில் நிர்வாகியாக இருந்தவர். இவர் தற்போது தன் சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். மேலும், இந்தக் கட்சிக்கு ரஜினியின் ஆதரவு குறித்த கேள்விக்கு அவர், "நான் திறமைசாலி என்பதால், என்னை ரஜினி விட்டுக்கொடுக்க மாட்டார் என்று நம்புகிறேன்" என்று பதிலளித்துள்ளார்.

Also Read: `ரஜினி என்னை விட்டுக்கொடுக்க மாட்டார்!' - தனிக்கட்சி ஆரம்பிக்கும் அர்ஜுனமூர்த்தி

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/news/politics/vikatan-poll-regarding-arjuna-moorthys-new-party-plans

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக