Ad

வெள்ளி, 29 ஜனவரி, 2021

`இப்போ தைரியம் வந்துருச்சு!' - தெளிவான அபி... `வில்லி'யான கௌசல்யா... அடுத்து என்ன? #VallamaiTharayo

சித்தார்த்துக்கும் அபிக்கும் இருப்பே கொள்ளவில்லை. கெளசல்யாவின் கணவர் சித்தார்த்திடம் வந்து, ``நீ தப்பு பண்ணிட்டே சித்து. சின்ன வயசிலிருந்து உன்னைப் பார்த்து எவ்வளவோ பெருமைப்பட்டிருக்கேன். ஆனா, இப்பப் பண்ணினது சரியில்ல. குழந்தைகளை நினைச்சுப் பார்க்க மாட்டியா? உங்க அக்கா எல்லோருக்கும் முன்னால என்னை எப்படியெல்லாம் பேசறா... எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கும். அதுக்காக சண்டை போட முடியுமா? குழந்தைகளுக்காகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் போகணும். இல்லைன்னா வாழவே முடியாது” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கெளசல்யா வருகிறார்.

``இவர் கிடக்கார். இனிமே அவளோட குடும்பம் நடத்த முடியுமா? நினைச்சுப் பார்க்கவே அருவருப்பா இருக்கு. சித்து நீ எதுக்கும் கவலைப்படாதே. வக்கீலைப் பார்ப்போம். குழந்தைகளை அன்னிக்கே அழைச்சிட்டு வந்திருக்கலாம். இந்த கலாட்டாவுல மறந்துட்டேன். குழந்தைகளை நம்ம கஸ்டடியில் வச்சுக்கலாம். நீ போய்த் தூங்கு” என்கிறார்.

Vallamai Tharayo

`பிரச்னை சரியாகிவிடக் கூடாது' என்கிற முடிவில்தான் கெளசல்யா இருக்கிறார். இப்படிப்பட்டவர்களால்தான் பல குடும்பங்கள் பிரிகிற நிலைக்கு வந்துவிடுகின்றன.

அபி வீட்டுக்கு வருகிறாள் அனு. வொர்க் ஃப்ரம் ஹோம். ஒரு மாதம் தங்கி, அபிக்கு உதவி செய்வதாகச் சொல்கிறாள். குழந்தைகள் இருவரும் அப்பாவுக்கு போன் செய்கிறார்கள். உடனே கெளசல்யா போனை வாங்கி, ``அப்பா வந்து உங்களை அழைச்சிட்டு வந்துடுவார். இனி அம்மா வேணாம். அவங்க ரொம்ப பேட் ஆயிட்டாங்க. நீங்க, அப்பா எல்லாம் இனி அத்தை வீட்லதான் இருக்கப் போறீங்க” என்கிறார்.

அபி, அனு, ஹர்ஷிதா பேசிக்கொண்டிருக்க குழந்தைகள் அத்தை சொன்ன விஷயங்களைச் சொல்கிறார்கள். அபி அழுகிறாள்.

``அழாத அபி. குழந்தைகள் வளர்ற வரைக்கும் அம்மாகிட்டதான் இருக்க முடியும். பயப்படாதே. இங்க பாருங்க குழந்தைகளா, இனி நீங்க அம்மா கூடத்தான் இருக்கப் போறீங்க. அப்பா அடிக்கடி வந்து பார்த்துப்பார். போன்ல பேசிக்குங்க” என்று அனு சொல்ல, `அப்பா வேண்டும்' என்கிறான் ஆதவ்.

``அப்பா, அம்மாவைத் திட்டினார் இல்லையா? இனி எப்படி சேர்ந்து இருக்க முடியும்? இனி நான்தான் உங்களை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போவேன். ஜாலியா விளையாடலாம். சரியா?”

Vallamai Tharayo

அலுவலகத்தில் கெளதம், ``என்னவெல்லாம் நடந்துருச்சு... எப்படி நீங்க சமாளிச்சீங்கன்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கு அபி” என்கிறான்.

``எனக்கே ஆச்சர்யமாதான் இருக்கு. ஆண்களுக்கு அடங்கித்தான் பெண்கள் எங்க வீட்ல இருப்பாங்க. என்னையும் அப்படித்தான் வளர்த்தாங்க. பேசிக் ரைட்ஸுக்குக்கூட குரல் கொடுக்கலைன்னா எப்படின்னு அனுகூடத் திட்டுவா. ஆரம்பத்துல பயம் இருந்துச்சு. இனி சமாளிச்சுக்கலாம்னு தைரியம் வந்துருச்சு.”

``என்னாலதான் இவ்வளவு பிரச்னைன்னு நினைக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு.”

``நீங்க இல்லைன்னாலும் அவர் ஏதோ ஒரு விதத்துல பிரச்னை பண்ணிட்டுதான் இருப்பார். குழந்தைகளுக்காகத்தான் தாங்கிக் கிட்டேன். இப்பக்கூட அவர்தான் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கார். அதைப் பார்த்த உடனே ஷாக்காயிட்டேன். ஆனா, கொஞ்ச நேரத்துல ஒரு பாரம் இறங்கின மாதிரிதான் இருந்துச்சு” என்கிறாள் அபி.

வாழ்க்கையில் முதல் முறையாகத் தயக்கம் களைந்து, தெளிவான மனநிலைக்கு வந்திருக்கிறாள் அபி.

அடுத்து என்ன?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா



source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-daily-digital-series-review-for-episode-69

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக