Ad

வியாழன், 28 ஜனவரி, 2021

நீலகிரி: யானைக்கு தீ வைத்த விவகாரம்... மசினகுடியில் 55 ரெசார்ட்டுகளுக்கு `சீல்’

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, மாவனல்லா, வாழைத்தோட்டம் மற்றும் பொக்காபுரம் போன்ற பகுதிகளில் அதிகளவிலான தனியார் ரெசார்ட்டுகள், தங்கும் விடுதிகள் உள்ளன.

elephant

காயத்துடன் சுற்றி வந்த ஆண் காட்டு யானை ஒன்று உணவு தேடி கடந்த வாரம் மாவனல்லா பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி வளாகத்திற்குள் நுழைந்தது. அங்கிருந்த சிலர் யானையை விரட்டி, அதன் மீது தீப்பந்தத்தை வீசினர். உடலில் பற்றி எரியும் தீயுடன் யானை பிளிறிக்கொண்டு ஓடிய வீடியோ வெளியாகி அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.

யானையின் இறப்புக்கு காரணமான 2 நபர்களை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

கைதானவர்கள்

யானைக்கு தீ வைத்த சம்பவம் நடந்த அந்த தனியார் தங்கும் விடுதி, அனுமதியின்றி செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து இரவோடு இரவாக அதற்கு சீல்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த பகுதிகளில் விதிமுறைகளை மீறி தனியார் தங்கும் விடுதிகள் செயல்படுகின்றனவா என வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளை கொண்ட குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது.

private resorts

இந்த ஆய்வின் அடிப்படையில் மாவனல்லா பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டுவந்த அதிர்ச்சியான சம்பவம் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 55 தனியார் விடுதிகளை மூட மசினகுடி ஊராட்சி மன்றம் மூலம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

Also Read: நீலகிரி: உணவு தேடி வந்த யானை மீது தீ வைத்த கொடூரம்! - நெஞ்சைப் பதறவைத்த சம்பவம்

இது குறித்து நம்மிடம் பேசிய வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், "குடியிருப்புக்களுக்கான அனுமதி பெற்று தங்கும் விடுதிகளாக செயல்பட்டு வந்த அனைத்து தனியார் தங்கும் விடுதிகளை உடனடியாக மூட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

private resorts

மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புக்களுக்கான உரிமம் பெற்று தங்கும் விடுதிகளாக செயல்பட்டுவந்த 55 விடுதிகளை மூட உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/55-illegal-resorts-closed-in-mudumalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக