நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் அருகில் உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி 34. திருமணமான இவர் கார்பென்டர் பணி செய்துவந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவரை ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்துள்ளார். இதில், அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார். மாணவியின் கர்ப்பத்தை கலைக்க மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளார் அந்தோணி. இதில் கரு கலைந்துள்ளது.
இதையறிந்த மாணவியின் தாயார் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அந்தோணியைக் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருணாசலம், குற்றவாளி அந்தோணிக்கு, 44 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
Also Read: சென்னை: மாயமான 17 வயது சிறுமி! - போக்சோ சட்டத்தில் கைதான தலைமைக் காவலரின் மகன்
அரசு தரப்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் மாலினி, ``போக்ஸோ சட்டத்தில் 44 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதல் முறை. இதுதான் அதிகபட்ச தண்டனை.
மைனர் பெண்ணின் கருவை சேகரித்து டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி நிரூபித்தோம். இதனாலேயே உரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
source https://www.vikatan.com/news/crime/nilgiris-mahila-court-sentenced-a-man-44-years-under-pocso-acto
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக