இந்திய அரசாங்கம், நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக கலிஃபோர்னியாவிலுள்ள டேவிஸ் நகராட்சி நிர்வாகத்துக்குக் மகாத்மா காந்தி சிலை ஒன்றைப் பரிசளித்தது. 6 அடி உயரம் 294 கிலோ எடையுடைய வெங்கலச் சிலை டேவிஸ் நகரத்தின் பூங்கா ஒன்றில் நிறுவப்பட்டது. தற்போது அந்தச் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த ஜனவரி 27-ம் தேதி, அதிகாலையில் வேலைக்கு வந்த பூங்கா ஊழியர், காந்தி சிலை சேதமடைந்திருந்ததை பார்த்ததாகவும், உடனே உள்ளூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
சேதமடைந்த சிலை பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சரி செய்யப்பட்டு மீண்டும் நிறுவப்படவுள்ளதாகவும் டேவிஸ் நகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறியும் பணியில் உள்ளூர் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்திய வெளியுறவுத் துறை இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் பதிவு செய்திருக்கிறது.
இந்தச் சிலை நிறுவப்பட்ட சமயத்திலேயே சிலர் `இங்கு காந்தி சிலை வைக்கக் கூடாது' என ஆர்ப்பாட்டம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. காலிஸ்தான் ஆதரவாளர்களும், இந்தியர்களுக்கான சிறுபான்மையினர் அமைப்பு ஒன்றும் இந்தப் போராட்டத்தை நடத்தியதாகத் தெரிகிறது.
Also Read: பிரிவினைதான் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட காரணமா? #RememberingGandhi
சிலையின் கால் பகுதியும், தலை பகுதியும் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் புகைப்படத்தை தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, `இன்று நல்ல நாள்' என்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் பதிவிட்டிருக்கின்றனர்.
டேவிஸ் நகரத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கும் சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான செய்திகள் அவரது நினைவு நாளிலேயே வெளியாகியிருப்பது இந்தியர்கள் அனைவரையுமே கலகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/international/gandhi-statue-gifted-by-indian-government-is-vandalised-in-california
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக