அலுவலகத்தில் தான் எதிர்பார்த்ததுபோல ப்ரமோஷன் கிடைக்காததால், வேலையை விடப் போகிறேன் என்றாள் சுமதி. கல்லூரித் தோழி... ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் டீம் லீடரான அவள் அசிஸ்டன்ட் மேனேஜர் ப்ரமோஷன் ரேஸில் இருந்தவள் எனத் தெரியும்.
"எனக்கு ப்ரமோஷன் கொடுக்காததுமில்லாம என்னைப்போல MBA கூட முடிக்காத ராஜேஷுக்கு அதை அவங்க கொடுத்தது பிடிக்கலை'' எனவும் சேர்த்துச் சொன்னாள்.
எதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது மனித இயல்பு என்பது புரிந்தாலும் நிலைமையை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள, ''எம்பிஏ சரி... உன்னைவிட ராஜேஷ்கிட்ட அப்படி என்ன தகுதி அதிகமாயிருந்திருக்கு?" என்றதும் "அவன் MBA கிடையாது. ஆனா ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் தொடர்பா போன வருஷம் இரண்டு சர்ட்ஃடிபிகேட் கோர்ஸ் முடிச்சான். அது கூடுதல் அட்வான்டேஜ் ஆகிடுச்சு போல" என்றாள்.
"உன் வேலைக்கு அந்த கோர்ஸ் அவ்வளவு முக்கியமா, அப்படின்னா ப்ரமோஷனை எதிர்பார்த்த நீ ஏன் அதை பண்ணல?" என்ற என் கேள்விக்கு மெளனமாக இருந்தால் சுமதி.
எதிர்பார்த்த பதவி உயர்வு வரவில்லை என நம்மில் பலரும் புலம்புவோம். ஆனால், அந்த ப்ரமோஷனுக்கு எப்படியெல்லாம் தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என பல நேரங்களில் சிந்தக்கவும், அதை நோக்கி நம் கவனத்தை செலுத்தவும் தவறிவிடுவோம். குறை சொல்லும் நேரத்தில் நம் ப்ரமோஷனுக்கான தகுதிகளை நம்முடன் அதே ரேஸில் இருக்கும் சக போட்டியாளர்களின் தகுதிகளுடன் ஒப்பிட்டு "அவர்களைவிட நாம் தனித்துத் தெரிவதற்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா?" என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டியது மிக மிக அவசியம்.
முன்பு வேலை பார்த்த கார்ப்பரேட் நிறுவனத்தில் எனக்கு அதிகாரியாக இருந்தவர் ஒரு விஷயத்தை சொல்லுவார். " எனக்கு ஏன் ப்ரமோஷன் கொடுக்கலை என்று கேள்வி கேட்பதற்கு முன், எனக்கு ஏன் இவங்க ப்ரமோஷன் கொடுக்கணும், அப்படி கொடுக்கணும்னா நான் என்னென்ன தகுதிகளை வளர்த்துக்கணும்னு உங்களைப் பார்த்து அடிக்கடி நீங்களே கேட்டுக்கோங்க. அப்பதான் வருஷக் கடைசியில் எதிர்பார்த்தும் நமக்குக் கிடைக்காத பதவி உயர்வை நினைச்சி வருத்தப்படமாட்டோம்" என்றார்.
"என் பாஸுக்கு என்னைப் பிடிக்காது", "ஆபிஸ்ல நிறைய பாலிடிக்ஸ் இருக்கு'', ''ஃபேவரிட்டிசம் இருக்கு'', ''அவங்களுக்கு ஜால்ரா அடிக்கும் ஆட்களுக்குத் தான் ப்ரமோஷன்''... எனப் பல காரணங்களை நாம் அடுக்கலாம். ஆனால், உண்மை என்ன என்பது நம் உள்மனதுக்கு நன்றாகவேத் தெரியும். "பதவி உயர்வுக்கான எல்லா தகுதிகளும் என்னிடம் இருக்கிறது" என நாம் திடமாக நம்பும் போது, நிர்வாகத்திடம் அது சம்பந்தமான கேள்வி கேட்கும் தன்னம்பிக்கைகையும் தைரியத்தையும் நமக்கு அந்த 'தகுதி' கொடுக்கும்.
First deserve and desire!
source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/morning-motivation-the-secret-formula-to-get-promotions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக