பிக் பாஸ் சீசன் 7 கிராண்ட் ஃபைனல் நடந்து முடிந்திருக்கிறது.
அர்ச்சனா பிக் பாஸ் 7வது சீசனின் டைட்டிலை வென்றிருக்கிறார். டாப் -3 வரை மணி, அர்ச்சனா, மாயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அடுத்ததாக மாயா எலிமினேட் ஆனார்.
இதன் பிறகு பேசிய மாயா, "முன்னாடியே சொன்ன மாதிரி நான் ஏற்கெனவே வின்னர்தான். இப்படியான மக்களை நான் சம்பாதிச்சுட்டேன்". என கரவொலிகள் எழும்பிய ரசிகர்களை நோக்கி கூறியவர் ," பிக் பாஸ் வீட்டுக்குள்ள நான் அவ்ளோ நட்பை சம்பாதிச்சு வச்சிருக்கேன். விக்ரமின் தன்னம்பிக்கை ரொம்பவே முக்கியம். யார் என்ன சொன்னாலும் விக்ரம் நினைச்ச மாதிரி அவன்தான் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.
இந்த மாதிரி போட்டியாளர்கள் அனைவரும் இந்த வெற்றியை உரிமை கொண்டாடணும். பூர்ணிமா நான் நன்றி சொல்லியாகணும். துயரம்னு சொல்றதுக்கு முன்னாடியே என் கையைப் பிடிச்சு தட்டிக் கொடுப்பாங்க. பூர்ணிமாவோட தன்னம்பிக்கையையும், அன்பையும் பார்த்து நான் வியந்திருக்கேன். அவங்களும் இந்த 16 லட்சத்தோட இந்த வெற்றியையும் உரிமை கொண்டாடணும்." என்றவர் கமலை நோக்கி " உங்ககூட நான் நிக்குறேன். நான் வின்னர்தான் சார்" என முடித்துக் கொண்டார்.
மாயாவிற்கு செகண்ட் ரன்னர் அப் கிடைத்தது குறித்து உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
source https://cinema.vikatan.com/television/maya-speech-after-eliminating-from-grand-finale
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக