சென்னையை பூர்வீகமாக கொண்ட ராஜு (வயது 60) பாரம்பரிய சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கே.என்.காளை( காளீஸ்வரன்) தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்க பொருளாளராக இருந்தவர். ராஜு, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சென்னை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றியவர், தி இந்து ஆங்கில நாளிதழில் கடந்த 19 ஆண்டுகளாக திண்டுக்கல், தேனி மாவட்ட செய்தியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். இருந்தபோதும், விகடன் இணையதளம், ஜுனியர் விகடன், பசுமை விகடன், ஆனந்த விகடன் ஆகியவற்றில் தன்னுடைய பங்களிப்பை தொடர்ந்து செய்து வந்தவர். உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை தன்னுடைய எழுத்துக்களால் மக்களை கவரக்கூடியவராக இருந்தார் ராஜு.
ராஜுவின் மறைவு, திண்டுக்கல் மாவட்டப் பத்திரிகையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ``அனைவரிடமும் உரிமையோடும், எளிமையாகவும் பழகக்கூடியவர். நேற்று நடைபெற்ற பழனி தைப்பூச திருவிழாவில் எங்களுடன் கலந்துகொண்டார். இன்று அதிகாலை அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு இறைவனடி சேர்ந்தார். அண்ணனின் இழப்பு எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை." என்று கலங்குகின்றனர் திண்டுக்கல் மாவட்ட பத்திரிகையாளர்கள்.
source https://www.vikatan.com/news/general-news/journalist-kraju-passed-away-this-morning
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக