தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது, பிரதமரை மெட்ரோ திட்ட தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அப்போது அவர் வண்ணாரப் பேட்டை, திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையை தொடங்கி வைப்பார் என்றும், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் பிரதமர் மோடியின் தமிழக வருகை நிச்சம் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சசிகலா இன்று டிஸ்சார்ஜ்
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்த சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். கடந்த சில நாள்களாகவே அவரது உடல் நிலை சீராக உள்ள காரணத்தால், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து பெங்களூரு மருத்துவமனை வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். இதனிடையே விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா, `சசிகலா 7 நாள் தனிமையில் இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
source https://www.vikatan.com/news/general-news/31-01-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக