Ad

சனி, 30 ஜனவரி, 2021

`ரொம்ப மிஸ் பண்றோம்ப்பா!' - கலங்கும் குழந்தைகள்... குழப்பத்தில் சித்து! #VallamaiTharayo

”இந்தப் பிரிதல் முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் இப்போ நிம்மதியா இருக்கு. ரொம்ப காலமா நான் இந்த நிம்மதிக்காகக் காத்திருந்திருக்கேன்னு இப்பதான் எனக்கே புரியுது. குழந்தைகள், குடும்பம்னு விட்டுக் கொடுத்து அலுத்துப் போயிட்டேன். நீங்க வருத்தப்பட வேணாம். நீங்க வருத்தப்பட்டா நான் தப்பு பண்ணின மாதிரி தோணுது” என்கிறாள் அபி.

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. உங்க தைரியம் சந்தோஷமா இருக்கு. இனி எப்பவும் இதே மாதிரி ஹேப்பியா இருங்க” என்று வாழ்த்துகிறான் கெளதம்.

நல்ல நட்பு இருந்தால் எந்தக் கஷ்டத்தையும் எளிதாகக் கடந்துவிடலாம்தானே!

Vallamai Tharayo

கெளசல்யா, “நம்ம சித்தப்பாகிட்ட விஷயத்தைச் சொன்னேன். வருத்தப்பட்டார். சென்னையில் அவர் நண்பர் வக்கீலா இருக்காராம். டைவர்ஸ் கேஸை எல்லாம் ஈஸியா முடிச்சிடுவாராம். ஆனா, அபி ஒருத்தனோட தங்கினதுக்கு புரூஃப் வேணும்னு சொன்னார். கேஸ் முடிஞ்சதும் உனக்கு நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நம்ம சித்தப்பாவோட தங்கை மகள் சென்னையில் படிச்சிட்டு, நல்ல வேலையில் இருக்கா. முதல்லயே அவளைப் பண்ணிருக்கலாம். இவ அழகா இருக்காளேன்னு கட்டி வச்சேன். நான் செஞ்ச தப்பை நான்தானே சரி செய்யணும்” என்கிறார்.

இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அதைப் பற்றி மட்டுமல்ல; எதைப் பற்றியும் யோசிக்காமல் சித்தார்த் வீட்டில் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்? எப்படியாவது அபியைப் பழி வாங்கிவிட வேண்டும் என்கிற ஈகோ மட்டும்தான் இதில் தெரிகிறது. அவர்கள் வீட்டுப் பெண் என்றால் இப்படி யோசிப்பார்களா?

கெளசல்யாவின் கணவர், “உங்க அக்கா சொல்றதை எல்லாம் கேட்டுட்டு இருக்காதே. பொறுமையா யோசி. வீட்டிலயே இருந்தா ஒரு மாதிரி ஆயிடுவே. முதல்ல ஒரு வேலையைத் தேடு. அபி வேலைக்குப் போறதாலதான் இவ்வளவு ஈஸியா விஷயத்தை ஹேண்டில் பண்றா” என்கிறார்.

Vallamai Tharayo

உடனே சென்னைக்குப் போவதாகச் சொல்கிறான் சித்தார்த். வீட்டில் தங்க வேண்டாம் என்கிறார் கெளசல்யா. அவனோ குழந்தைகளைப் பார்க்க வீட்டுக்குச் செல்கிறான். கார்டனில் குழந்தைகள் அனுவுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். சித்தார்த்தைக் கண்டதும் ஓடி வருகிறார்கள்.

வீட்டுக்கு வரச் சொல்கிறாள் ஆதிரா. சித்தார்த் தயங்குகிறான். “குழந்தைகள் ரொம்ப ஏங்கறாங்க. வீட்டுக்கு வாங்க” என்று அழைத்துச் செல்கிறாள் அனு.

“நாங்க உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்ப்பா. ரொம்பக் கஷ்டமா இருக்கு. நீங்க ஏன் அத்தை பேச்சைக் கேட்கறீங்க? எனக்கு அவங்களைப் பிடிக்கவே இல்லை. அவங்க அம்மாவை ரொம்ப மோசம்னு சொல்றாங்க. இனி நீங்க எங்களோடதான் இருக்கணும். எங்கேயும் போகக் கூடாது” என்று சொல்லிவிட்டு, அபியை அழைத்து வருகிறாள் ஆதிரா.

எதிர்பாராமல் படுக்கையறையில் சித்தார்த்தைக் கண்ட அபி அதிர்ச்சியடைகிறாள். ஆதிரா தம்பியை அழைத்துக்கொண்டு செல்கிறாள்.

சித்தார்த்தும் அபியும் தனிமையில் இருக்கிறார்கள்.

இனி என்ன?

திங்கள் இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா



source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-daily-digital-series-review-for-episode-70

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக