Ad

புதன், 27 ஜனவரி, 2021

`இதைக்கூட கவனிக்க மாட்டீங்களா?’ - பா.ஜ.க இணையதளத் தகவலால் சர்ச்சை

தெரியாத ஒரு வார்த்தையை மொழி பெயர்க்க வேண்டுமானால் உடனே நாடுவது கூகுள் மொழிபெயர்ப்பைத்தான். ஆனால், கூகுள் மொழிபெயர்ப்பால சில நேரங்களில் வில்லங்கம் வந்து விடுகிறது. அதனைச் சரியாக கவனிக்காவிட்டால் தேவையில்லாத சிக்கலில் மாட்ட வேண்டிவரும். அப்படி ஒரு சிக்கல்தான் பா.ஜ.க பெண் எம்.பி-க்கு வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ரேவார் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க எம்.பி-யாக இருப்பவர் ரக்‌ஷா கட்சே. சமீபத்தில் சரத்பவார் கட்சியில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவின் மருமகள் ஆவார்.

அனில் தேஷ்முக்

கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் என இரண்டு தேர்தல்களிலும் ஏக்நாத் கட்சேவுக்கு பா.ஜ.க வாய்ப்புக் கொடுக்கவில்லை. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் அவரது மருமகள் ரக்‌ஷா கட்சேவுக்கு பா.ஜ.க சீட் கொடுத்தது. பா.ஜ.க-வின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் ரக்‌ஷா கட்சே ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையாகியிருக்கிறது.

Also Read: செங்கோட்டையில் மதக்கொடி; பா.ஜ.க தொடர்பு! - வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் தீப் சித்து யார்?

இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், `ரக்‌ஷா கட்சேவை அவமதிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள வார்த்தையை பா.ஜ.க உடனே நீக்கவேண்டும். பெண்களுக்கு எதிராக இதுபோன்று அவமரியாதை செய்யப்படுவதை அரசு பார்த்துக் கொண்டிருக்காது. பா.ஜ.க சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மகாராஷ்டிரா சைபர் பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்று குறிப்பிட்டார்.

பா.ஜ.க இணையதளம்

இதுகுறித்து விசாரித்தபோது, `பா.ஜ.க இணையத்தளத்தில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், ஆங்கிலத் தகவலை அப்படியே கூகுள் மொழி பெயர்ப்பில் எடுத்து பதிவேற்றம் செய்துள்ளனர். ரேவார் என்ற வார்த்தை கூகுள் மொழிபெயர்ப்பில் ஓரினச் சேர்க்கையாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக்கூட சரியாக கவனிக்காமல் பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயல்படுகிறது’ என்ற விமர்சனம் எழுந்துள்ளது



source https://www.vikatan.com/social-affairs/controversy/maharastra-minister-slams-bjp-over-its-official-website-details-on-mp-raksha-khadse

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக