Ad

வியாழன், 28 ஜனவரி, 2021

`2020 -யின் 4, 5 மினி பட்ஜெட்கள்..!’ - கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி

2021 -ம் ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ள நிலையில், கூட்ட தொடரில் கலந்து கொள்ளவந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ``இன்று இந்த தசாப்தத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு, இந்த தசாப்தம் மிகவும் முக்கியமானது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்ற தேசத்தின் முன் ஒரு பொன்னான வாய்ப்பு வந்திருக்கிறது.

இந்த 10 ஆண்டுகளும் முழுமையாக பயன்படுத்தபட வேண்டும். இதை மனதில் வைத்து, இந்த அமர்வில் அடுத்த 10 ஆண்டுகளை மையமாகக் கொண்ட விவாதங்கள் இருக்க வேண்டும். இதுதான் தேசத்தால் எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக எங்கள் பங்களிப்பை வழங்குவதில் நாங்கள் பின்தங்க மாட்டோம் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``இது பட்ஜெட் கூட்டத்தொடர். இந்திய வரலாற்றில் முதல் முறையாக நிதியமைச்சர், 2020-ம் ஆண்டில் 4-5 மினி பட்ஜெட்கள் வழங்க வேண்டி இருந்தது. எனவே இந்த பட்ஜெட் அந்த 4-5 மினி பட்ஜெட்டுகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படும், இதை நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/news/this-decade-is-very-important-for-the-bright-future-of-india-says-modi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக