Ad

சனி, 30 ஜனவரி, 2021

வின்ஸியின் சதத்தை தடுத்த ஆண்ட்ரூ டை... இறுதிப்போட்டிக்குள் சிட்னி சிக்சர்ஸ் நுழைந்தது எப்படி?#BBL

பிக்பேஷ் லீகின் எலிமினேட்டர் போட்டி நடந்து முடிந்த நிலையில் நேற்று முதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடித்த சிட்னி சிக்சர்ஸ் அணிக்கும் பெர்த் ஸ்காச்சர்ஸுக்கும் இடையே நடந்த இந்த போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுகழைந்திருக்கிறது.

பேட் ஃபிளிப் முறையில் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் கேப்டன் ஆஷ்டன் டர்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் ஓப்பனர்களாக ஜேசன் ராயும் லிவிங்ஸ்டனும் களமிறங்கினர். சிட்னி சிக்சர்ஸ் அணியிம் சார்பில் வார்சூயிஸ் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் 4 டாட்கள் ஆடி 5-வது பந்தில் மட்டுமே ஒரு ரன் அடித்தார் ராய். பேர்டு வீசிய இரண்டாவது ஓவரிலும் பவுண்டரி வரவில்லை. முதல் இரண்டு ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. பவர்ப்ளே முடிய 2 ஓவர்கள் மட்டுமே இருந்ததால் இந்த கூட்டணி பவுண்டரிக்கு முயன்றது. ஷேன் அபாட் வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் பந்து வருவதற்கு முன்பே சீக்கிரமாக ராய் கவர் டிரைவுக்கு பேட்டை விட பந்து பேட்டில் பட்டு அபாட்டிடமே கேட்ச் ஆனது. ராய் 9 பந்துகளை சந்தித்து 3 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார். நம்பர் 3-ல் காலின் மன்றோ களமிறங்கினார். இதன்பிறகுதான் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. வார்சூயிஸ் வீசிய நான்காவது ஓவரில் இருவரும் சிக்சர் அடித்து பவர்ப்ளேவை சிறப்பாக முடித்து வைத்தனர். பவர்ப்ளே முடிவில் பெர்த் அணி 30 ரன்களை எடுத்திருந்தது. சிட்னி சிக்சர்ஸ் அணியின் கேப்டனான ஹென்ரிக்ஸ் 6 வது ஓவரில் பிராத்வெய்ட்டை பந்துவீச அழைத்தார்.

#BBL

அவர் வந்தவுடனேயே ஒரு விக்கெட்டை வீழ்த்திக்கொடுத்தார். பவர்ப்ளே முடிந்ததால் ஃபீல்டர்கள் டீப்பில் நின்றனர். வட்டத்துக்குள் ஆஃப் சைடில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு ஃபீல்டர் மட்டுமே இருந்தார். பிராத்வெயிட் வீசிய ஒரு ஃபுல் லென்த் டெலிவரியை அந்த ஃபீல்டரிடமே தூக்கிக்கொடுத்து வெளியேறினார் லிவிங்ஸ்டன். இதன்பிறகு, மன்றோவும் இங்லிஸும் கூட்டணி சேர்ந்தனர். இவர்கள் கொஞ்சம் பொறுப்பாக நின்று ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அடித்து ஆடிக்கொண்டிருந்தனர். 10 ஓவர்கள் முடிவில் பெர்த் அணி 80 ரன்களை எடுத்திருந்தது. இரண்டு அணிகளுமே இந்த போட்டியில் X-Factor வீரர்களை பயன்படுத்தவில்லை. பேர்ட் வீசிய 12 வது ஓவரில் மன்றோ 30 ரன்னில் அவுட் ஆகி வெளியேற அதன்பிறகு ரன்ரேட் குறைய ஆரம்பித்தது. 15 ஓவர்கள் முடிவில் பெர்த் அணி 98 ரன்கள் மட்டுமே எடுத்தது.

16-17 வது ஓவரில் பவர் சர்ஜை எடுத்த கேப்டன் டர்னர் மற்றும் இங்லிஸ் கூட்டணி அதிரடி காட்டி ரன்ரேட்டை உயர்த்த ஆரம்பித்தது. அப்பாட் வீசிய 16வது ஓவரில் டர்னர் இரண்டு சிக்சர் மற்றும் பவுண்டரியுடன் 16 ரன்களை எடுத்தார். அதே ஓவரில் இங்லிசும் ஒரு சிக்சர் அடித்தார். வார்சூயிஸ் வீசிய அடுத்த ஓவரிலும் 12 ரன்கள் கிடைத்ததால் இந்த பவர் சர்ஜில் மட்டும் 34 ரன்கள் கிடைத்தது. வார்சூயிச் வீசிய 19வது ஓவரில் டர்னர் அவுட் ஆக 20வது ஓவரில் இரண்டு சிக்சர்களை அடித்து இங்லிச் சிறப்பாக முடித்து வைத்தார். இங்லிஸ் 69 ரன்னில் நாட் அவுட் ஆக இருந்தார். கடைசி 5 ஓவரில் மட்டும் பெர்த் அணி 69 ரன்களை சேர்த்தது. சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு 168 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்தது.

சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக ஃபீல்டிங்கின் போது கீப்பராக நின்ற ஜோஷ் ஃபிலிப்பே இங்லிஸுக்கு ஒரு சுலபமான கேட்ச்சை டிராப் செய்திருப்பார். அந்த கோபத்தில் இருந்திருப்பாரோ என்னவோ வந்தவுடனே முதல் ஓவரிலிருந்தே அதிரடியை தொடங்கிவிட்டார். ரிச்சர்ட்ஸன் வீசிய அந்த ஓவரில் மட்டும் ஒரு பவுண்டரியையும் சிக்சரையும் அடித்தார் ஃபிலிப்பே. இன்னொரு ஓப்பனரான ஜேம்ஸ் வின்ஸியும் அதிரடியே காட்டினார். பெஹ்ரண்டாஃப் வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிக்களை விளாசினார். இவர்கள் இருவருமே அடித்து துவம்சம் செய்வது என்கிற முடிவோடு வந்திருந்தனர். இதன்விளைவாக 4 ஓவர் பவர்ப்ளே முடியும் போது அணியின் ஸ்கோர் 43 ரன்னாக உயர்ந்தது. தொடர்ந்து ரன்ரேட்டை 10க்கு கீழ் விடாமல் அடித்து ஆடிக்கொண்டிருந்தனர். 9 ஓவர்களில் 92 ரன்கள் சேர்த்த இந்த கூட்டணி ஆட்டத்தையே மாற்றிவிட்டது.

இதன்பிறகு, லிவிங்ஸ்டன் வீசிய பந்தில் ஸ்வீப் ஆட முயன்று ஃபைன் லெகில் கேட்ச் ஆகி 45 ரன்களில் வெளியேறினார். இடையில் வின்ஸுக்கு ஒரு கேட்ச்சையும் ஆண்ட்ரூ டை கோட்டைவிட்டார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நம்பர் 3 ல் வந்த ஹுக்ஸ் சிங்கிள் தட்டி ஸ்ட்ரைக்கை வின்ஸிடம் கொடுக்க அவர் பவுண்டரியும் சிக்சருமாக அடித்துத்தள்ளினார். வின்ஸி சதத்தை நெருங்கி 98 ரன்னில் இருக்கும் போது அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்நேரத்தில் ஹூக்ஸ் ஒரு பவுண்டரி அடித்துவிட வின்ஸிக்கு டென்ஷன் ஏறியது. ஆனால், அதற்கு அடுத்த மூன்று பந்துகளையும் டாட் ஆடி அடுத்த ஓவரை வின்ஸுக்கே கொடுத்தார் ஹூக்ஸ். ஹுக்ஸ் ஒவ்வொரு டாட் ஆடும்போதும் ரசிகர் கூட்டம் ஆராவாரம் எழுப்பியது. வின்ஸ் சதத்திற்கு ஒரு மாஸ் பில்டப் உருவாகத் தொடங்கியது. வின்ஸி வின்னிங் ஷாட்டோடு சதமும் அடிப்பார் என எதிர்பார்க்கையில் அந்த ஓவரை வீசிய ஆண்ட்ரூ டை ஒயிடாக வீசிவிட ஆட்டம் முடிந்தது. வின்ஸி சதமும் அடிக்க முடியவில்லை. இதில் வின்ஸும் அப்செச். ரசிகர்களும் அப்செட். வின்ஸி அந்த ஏமாற்றத்தை சில நொடிகள் மட்டும் வெளிக்காட்டிவிட்டு பின் இயல்பானது சிறப்பு. ஆண்ட்ரூ டையும் அந்த ஒயிடை வீசிவிட்டு மன்னிப்புக் கேட்டிருந்தார்.

#BBL

வின்ஸி சதம் அடிக்க முடியவில்லை எனிமும் தன்னுடைய சிட்னி சிக்சர்ஸ் அணியை தகுதிபெற வைத்துவிட்டார். தோற்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு சேலஞ்சர் சுற்று என இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது.



source https://sports.vikatan.com/cricket/james-vince-powers-sydney-sixers-into-bbl-finals

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக