"சின்ன வயசுல இருந்து சென்னைக்கு வந்துட்டு இருக்கேன். எப்பவும் சென்னை பிடிக்கும். மெரினா பீச் அண்ட் சுந்தரி அக்காவுடைய மீன் குழம்பும் ஆல்டைம் ஃபேவரைட். முதல் முறையா என்னோட படம் 'செம திமிரு' தமிழ்ல டப் ஆகுறது சந்தோஷத்தைக் கொடுக்குது. முக்கியமா, என்னோட தாய் மாமா அர்ஜூன் தமிழ் ரைட்ஸ் வாங்கியிருக்கார்" என்கிறார் கன்னட நடிகர் துருவ் சர்ஜா.
திடீர்னு 'பொகரு' படத்தை தமிழ்ல டப் பண்ணணும்னு ஏன் முடிவெடுத்தீங்க?
'' 'சிவா'ங்குற கேரக்டர்ல நடிச்சிருக்கேன். முழுக்க முழுக்க வில்லத்தனம் நிறைஞ்ச கேரக்டர். படத்தோட கடைசி வரைக்குமே வில்லனா மட்டும்தான் இருப்பேன். இருந்தும், படத்தோட ஹீரோ நான்தான். படத்தோட ரைட்டர் அருண் ஸ்க்ரிப்ட் எழுதுறபோதே தமிழ் ஆடியன்ஸூம் பார்த்து ரசிக்குற மாதிரிதான் எழுதினார். பதினேழு வயசு பையனுடைய கேரக்டரும் படத்துல இருக்கு. இதுக்காக என் வெயிட்ல இருந்து 33 கிலோவை குறைச்சு நடிச்சேன். வேலைனு வந்துட்டா நூறு சதவிகிதத்தை அப்படியே கொடுத்திடுவேன். தினமும் 50 மினிட்ஸ் வொர்க் அவுட் பண்ணுவேன். படத்துல இன்டர்நேஷனல் பாடி பில்டர்ஸ் கூடவும் சேர்ந்து நடிச்சிருக்கேன்.''
உங்க மாமா அர்ஜூன் படம் பார்த்துட்டு என்ன சொன்னார்?
"மாமாவுக்கு படம் பிடிச்சிருந்தது. அதனாலதான் படத்தோட தமிழ் ரைட்ஸ் வாங்கி வெளியிடுறார். தவிர, எனக்கு எப்பவும் மாமா மேல பெரிய ப்ரியம் உண்டு. ஃபிட்னஸ் இன்ட்ரஸ்ட் மாமானாலதான் வந்தது. மாமா மாதிரியே நானும் அனுமான் பக்தர்."
ராஷ்மிகாகூட முதல் முறையா ஒண்ணா சேர்ந்து நடிச்ச அனுபவம்?
"ரொம்ப ஃப்ரெண்ட்லியான பொண்ணு. 'karabu' பாட்டுல நிறைய டார்ச்சர் பண்ணியிருப்பேன். ஆனா, அவங்க கொஞ்சமும் முகம் சுழிக்காம நடிச்சு கொடுத்தாங்க. இந்தப் பாட்டு ரிலீஸானவுடனே செம ஹிட்டாகிருச்சு. கிட்டத்தட்ட பதினெட்டு நாளைக்கு மேல ட்ரெண்டிங்ல இருந்தது. கன்னடத்துல அதிக பேர் ரசிச்சு பார்த்த பாட்டா இது இருக்கு. பாட்டுல வர்ற என்னோட டான்ஸ் ஸ்டெப் நல்லாயிருக்குனு எல்லாரும் சொன்னாங்க. கொஞ்சமும் எனக்கு டான்ஸ் ஆட வராது. ஆனா, டான்ஸ் மாஸ்டர் முரளி கொடுத்த உற்சாகத்துல நல்லா ஆடிட்டேன்."
தமிழ் படங்கள் பார்க்குறது உண்டா?
''மாமா அர்ஜூனுடைய படங்கள் பார்த்துதான் தமிழ் பேச கத்துக்கிட்டேன். 'முதல்வன்', 'ஜென்டில்மேன்', 'சேவகன்', 'பிரதாப்' படமெல்லாம் பார்த்திருக்கேன். இயக்குநர் பாலா மற்றும் செல்வராகவனின் படங்கள் பிடிக்கும். சீக்கிரமே தமிழ்ல நடிக்கவும் ரெடியா இருக்கேன். முக்கியமா மாமாவுடைய டைரக்ஷன்ல நடிக்க ஆசை. ஏன்னா, அவர் படத்தோட திரைக்கதை வடிவம் நல்லாயிருக்கும். ஆனா, மாமா ஷூட்டிங் ஸ்பாட்ல நின்னா அவர் முன்னாடி நின்னு நடிக்குறதுக்கு தயக்கமா ஃபீல் பண்ணுவேன்.''
படத்தோட ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் பற்றி?
''நல்ல மனிதர். படத்தோட ஒளிப்பதிவாளர்ங்குற விஷயத்தை தாண்டி டீச்சர் மாதிரினு சொல்லுவேன். ஏன்னா, ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுப்பார். நிறைய டிஸ்கஷன் எங்களுக்குள்ள நடந்திருக்கு. இவரோட ஒளிப்பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.''
மறைந்த உங்கள் அண்ணன் சிரஞ்சீவி சர்ஜா பற்றி...
''அண்ணாவும் நானும் ரொம்ப க்ளோஸ். அவரை இப்ப ரொம்பவே மிஸ் பண்றேன். குட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்திருக்கான். மூணு மாசம் கைக்குழந்தை. இவனை பார்த்து ஒரு மாசம் ஆகிருச்சு. சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்.''
source https://cinema.vikatan.com/tamil-cinema/kannada-actor-dhruva-sarja-about-his-upcoming-movie-pogaru-aka-sema-thimiru
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக