அருளானந்தம் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் இருக்கின்றனர். இதுதொடர்பாக சி.பி.ஐ விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று மாலை இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால் (29), வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு (27), அருளானந்தம் (34) ஆகியோர் சி.பி.ஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அருளானந்தம் பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணி செயலாளராக இருந்து வருகிறார்.
நேற்று கைது செய்யப்பட்ட மூவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் மூவரையும் ஜனவரி 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தத்தை தற்போது அ.தி.க.வில் இருந்து நீக்கி ஒ.பி.எஸ் -இ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளனர்.
source https://www.vikatan.com/news/general-news/06-01-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக