பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
திருமதி சற்றே அயர்ந்து தூங்கியதன் விளைவு, காலையில் வாக்கிங் போக முடியவில்லை! ஆகையால் மாலையில் வாக்கிங் போகலாம் என ஒரேயொரு “மனதாக” தீர்மானிக்கப்பட்டிருந்தது.
மாலையில் நடக்க ஆரம்பிக்கும் போது மக்கள் வீடடையும் நேரம்! சாலையின் வெகு ஓரமாகவே நடக்க வேண்டியிருந்தது. ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு தான் ஆள் நடமாட்டம் குறைவான மைதானம் இருக்கிறது. அது மாலை நேரத்தில் நடைபயில ஏற்றம் இடம்!
Also Read: ``தமிழய்யா சொன்ன ஆங்கில வார்த்தைப் புதிர்..!'' - வாக்கிங் டாக்கிங் - 1 #MyVikatan
”காலையிலே வாக்கிங் போயிருக்கலாம்” நானாகவே பேச்சை ஆரம்பித்தேன்!
ஒரு நாள் லேட்டா தூங்கிட்டேன்! அதைச் சொல்லிக்காட்டணுமா?
இப்படியொரு எதிர்வினையை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை! எனவே, திருமதியின் கோபத்தை திசை மாற்றவேண்டியாயிற்று!
ஏன் தூக்கம் சரியாயப் பிடிக்கலையோ?
நான் தூக்கம் பிடிக்கலைன்னு சொன்னேனா?
இனி பேசக்கூடாது என அமைதியானேன்.
என்ன பேச்சை நிறுத்திட்டீங்க?
இன்னிக்கு ராசிபலன் சரியில்லை என உணரத்தொடங்கினேன்.
”தூக்கம் சரியா வரலையா?” ன்னு கேட்டேன்!
ஆமாம்…
கொசுக்கடியா? இல்லை, ஃபேன் காத்து பத்திலையா?
சத்தம்…
ஃபேன் சத்தம் சில சமயம் அப்படிதான்… நான் கூட ஃபேன் ஏன் மூணு பிளேடு வைச்சுருக்காங்க? இன்னும் ஒன்னு, இரண்டு பிளேடு வைச்சிருக்கலாமுன்னு யோசிச்சிருக்கேன்…
ஹலோ…
என்னாச்சு…
நீங்க நினைக்கிற மாதிரி பிளேடு அதிகம் வைச்சா காத்து வராது! உப்புசம் தான் வரும்… பிளேடு அதிக வைச்சா காத்து சுழற்சி கம்மியாடும்… அது கூட தெரியாமலையா இருப்பாங்க?
”நமக்கு தூக்கம் தானே முக்கியம்?” திருமதிக்கு ஆதரவாகக் குரலை மாற்றினேன்.
ஆமாம்… தூக்கம் முக்கியம் தான். யார் இல்லைன்னு சொன்னா? ஆனா சத்தம் வராம இருக்கணுமே…
”சத்தம் வந்தா மனுசன் நிம்மதியா தூங்க முடியுமா?” இது என் தரப்பு நியாயம்.
”எல்லாஞ் சொல்லுமாம் பல்லி
கழனிப் பானையில விழுமாம் துள்ளி!” என வழக்கமான ஸ்டைலில் சொலவடை வந்து விழுந்தது.
”நீ போ தள்ளி” என ரைமிங்காக சொன்னேன்.
உங்க குறட்டை தள்ளி போயிருந்தா…எனக்கு தூக்கம் தள்ளிப் போயிருக்காது.
எனது குறட்டைச் சத்தம் தான் திருமதியின் தூக்கம் காணாமல் போனதற்கும், இப்போதைய எரிச்சலுக்கும் காரணம் எனப்புரிந்தது.
குறட்டை வராம இருக்க… தலையணை இல்லாமல் தூங்கிப்பார்க்கிறேன்.
அதெல்லாம் வேண்டாம்…
என்ன செய்யலாம்…
UVULOPALATOPHARYNGOPLASTY…
என்ன நாஸ்டியோ… எனக்குப்புரியல…
குறட்டை வராம இருக்கிற செய்யற சின்ன அறுவை சிகிச்சை தான்…
நான் செஞ்சுக்கிறேன்…. அப்படியே வாய்க்கு எதாவது அறுவை சிகிச்சை இருக்கா?
இந்த வாய் மட்டும் எனக்கு இல்லையின்னா, உங்களை சமாளிக்க முடியுமா?
”ஆரம்பித்திலேயே ஏமாந்து விட்டுட்டேன்…” என என் ஆதங்கத்தை சும்மா சொல்லி வைத்தேன்.
”கட்டி வச்ச பூனைய அவுத்து விட்டுட்டு
வா பூஸ்… வா பூஸ்னா வருமா?” என்ற திருமதியின் வார்த்தைகள் என் காதில் “புஸ்… புஸ்” என விழுந்தது.
என்ன புஸ்…சுஸ்?
ஆமா… நீங்க புஸ்…புஸ்ன்னு விடற குறட்டைக்கு SUS ன்னு தான் சொல்லணும்?
SUS ன்னா என்ன?
SOCIALLY UNACCEPTABLE SNORING!
”தானா வரக் குறட்டையை இந்த சமூகம் ஏத்துக்காதா?” இது என் தார்மீகக் கேள்வி.
ஆமாம்… நானா இருக்கிறதால சமாளிக்கிறேன்! உலத்தில விவாகரத்து வாங்கிறதுக்கு முக்கிய மூணாவது காரணமே குறட்டை தான், தெரியுங்களா?
சரி விடு… விடு… நான் வாபூஸ் வாங்கிக்கிறேன்!
எதிரில் ஒருவர் வெகுவேகமாக வாக்கிங் வந்து கொண்டிருந்தார். அவரைப்பார்த்ததும் திருமதி சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
சொல்லிட்டு சிரிக்கலாமே!
அதுங்களா…. அவரோட டி சர்ட் பாருங்க…
ஆரவத்தோடு பார்த்தேன்.
“I DON’T SNORE
I DREAM
I AM A MOTORCYCLE!”
”நல்லவேளை ஜெட்ன்னு எழுதல…” என்றேன்.
எழுதா இருந்தா… ஜெட் மாதிரி குறட்டை வராதா? உலகத்திலே பயங்கரமா குறட்டை விடற ஆசாமி ஜெட் கிளம்புற மாதிரி சத்தமா குறட்டை விடுவாறாம்!
விட்டா… குறட்டையில மின்சாரம் தயாரிக்க சொல்லிடுவ போல…
”அப்படியாவது கண்டுப்பிடிச்சா நமக்கு நல்லது தான்…” எனத் திருமதி சொன்னதும்
”ஆமாம்…பெட்ரோல் விலை அதிகாமாயிடுச்சு!” என பேச்சை மாற்றினேன்.
அதனால்… இனி நடந்தே ஆபிசுக்கு போகப்போறீங்களா?
ஏன்… நானே நடந்து போகணுமா? நீ வீட்டை செலவை பாதியா குறைக்கலாமே?
நல்ல ஐடியா…
நான் சொன்ன ஐடியாவை சட்டென ஏற்றுக்கொண்டது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஏனென்றால், கணவன் சொல்லும் ஐடியாவை மனைவி சட்டென ஏற்றுக்கொண்டால் அந்த ஐடியா வெத்துவேட்டுன்னு அர்த்தம்!
என்ன சட்டென்னு சரின்னு சொன்னதுக்கே உனக்கு பட்டுப்புடவை கிப்ட் தரலாம்…
எதை வைச்சு சொல்றீங்க?
உன் நகையை வைச்சு தான்…
எப்ப பாரு என் நகை மேல தான் கண்ணு!
Also Read: இந்த Body Spray விஷயமெல்லாம் சங்க காலத்தில இருந்ததா? - வாக்கிங் டாக்கிங் - 13
அவசரத்துக்கு உதவுறதுக்கு தானே நகை எல்லாம்! TIME IS GOLD தெரியுமா?
அப்ப TIME ஐ அடமானம் வையுங்க…
ஹா…ஹா…ஹா…
”என்ன சிரிச்சு பூசி மெழுகிறீங்களா?”
ஆமா…தங்கம் பூசி மெழுகினா கவரிங்…
ஒலிம்பிக்கில பொய் சொல்ற போட்டி வைச்சா, உங்களுக்கு தான் தங்க பதக்கம்…
தங்கத்தை உனக்கு கொடுத்துடுவேன்!”
”இது கூட பொய் தான்!” இது திருமதியின் கண்டுபிடிப்பு.
ஏன்… எனக்கு உண்மை ”தங்க” வராதா! இல்லை, உண்மையில் தங்கம் வராதா?
தங்க பதக்கமே வெள்ளியில தான் செஞ்சிருப்பாங்க…எப்படி தங்கம் வரும்?
நான் தான் ஜெயிப்பேன்… ஆனா, நீ நடுவரா இருக்கக்கூடாது!
அந்த பயம் இருக்கட்டும்… வீட்டு செலவை சரி பாதியாக குறைக்க சொன்னீங்களே…
ஆமா… அதுக்கு என்ன செய்யப்போற?
இனி எனக்கு மட்டும் சமைக்கப்போறேன்… பாதி செலவு தான் ஆகும்!
அமைதியாக நடக்க ஆரம்பித்தேன்!
-டாக்கிங் தொடரும்
-சி.ஆர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-walking-talking-series
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக