ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்துத் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பான வழக்கொன்றில், அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி நீதிமன்றத்துக்கு ஆளுநர் பதில் சொல்ல வேண்டியதில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சட்டமன்றத்தில் பலகட்ட ஆலோசனை, விவாதங்களுக்குப் பின்னரே சட்டம் இயற்றப்பட்டிருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
Also Read: 7.5% இட ஒதுக்கீடு விவகாரம் : பா.ஜ.க-வும் ஆளுநருக்குக் கோரிக்கை... தாமதமாவது ஏன்?
22 இடங்களில் இரண்டாவது நாளாக ஐ.டி. ரெய்டு!
தமிழகத்தில் 22 இடங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனையில் ரூ.5 கோடி பணம் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், ரூ.150 கோடிக்குக் கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறது. தமிழகம் முழுவதும் தி.மு.க நிர்வாகி பையா கவுண்டருக்குச் சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read: சசிகலா, சுதாகரன், இளவரசிக்குச் சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துகள் முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி
source https://www.vikatan.com/news/general-news/29-10-2020-just-in-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக