Ad

புதன், 28 ஜூலை, 2021

கோவை: குடிபோதையில் தகராறு செய்த மகன்! - அடித்துக் கொன்ற தந்தை கைது

கோவை மாவட்டம், பேரூர் அருகேயுள்ள செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் (வயது 62). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக, `மகிழ்ச்சி என்ற பெயரில் ஒரு ஹோட்டல் கடையை நடத்திவருகிறார். கொரோனா, ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாக ஹோட்டல் கடைக்கான வாடகையைக் கொடுக்க முடியவில்லை.

கோவை

இதனால் அந்த இடத்தின் உரிமையாளர் கணேஷ் என்பவர் கடையை காலி செய்யுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து, பாக்கியநாதன் நேற்று காலை கடையை காலி செய்வதற்காகப் பொருள்களை எடுத்திருக்கிறார். அப்போது, பாக்கியநாதனின் மகன் சபரிநாதன் (வயது 33) அங்கு சென்றிருக்கிறார். குடிபோதையிலிருந்த சபரிநாதனுக்கும், அவரின் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

பாக்கியநாதன்

'என்னைக் கேட்காமல் கடையை ஏன் காலி செய்கிறாய்?' என்று சபரிநாதன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, தந்தை பாக்கியநாதனை கையால் அடித்துக் கீழே தள்ளிவிட்டிருக்கிறார் சபரிநாதன்.

இதன் காரணமாக, பாக்கியநாதனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாக்கியநாதன், வீட்டிலிருந்த இரும்புச்சுத்தியாலும் மூங்கிலாலும் சபரிநாதனைச் சரமாரியாக தாக்கியிருக்கிறார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

சபரிநாதன்

இதையடுத்து, குடும்பத் தகராறில் மகனைத் தாக்கிவிட்டதாக பாக்கியநாதனே பேரூர் காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார். பிறகு சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சபரிநாதனின் உடலை மீட்டனர். மேலும், பாக்கியநாதனைக் கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Also Read: ஜீன்ஸ் அணிந்ததால் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி; உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!



source https://www.vikatan.com/news/crime/coimbatore-father-killed-son-in-family-issue-surrendered-to-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக