கொரோனா பரவல் காரணமாக இ பாஸ் முறை நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கவும் வேறு மாநிலங்களுக்குப் பயணிக்கவும் இ பாஸ் கட்டாயமாக உள்ளது. இதனிடையே மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி மாநிலங்களுக்கு எழுதிய கடிதத்தில் மாநிலத்திற்குள்ளேயே ஒரு மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்குப் பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் பிற மாநிலங்களுக்குச் செல்லும் சரக்குப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு உத்தரவுப்படி புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல தமிழகத்திலும் இ பாஸ் முறையை ரத்து செய்யலாமா? உங்கள் கருத்தைக் கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-epass-cancellation-decision
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக