காங்கிரஸ் முதல்வர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை!
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நேற்று முந்தினம் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார். இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசிக்கபட உள்ளது.
அறிவிக்கப்பட்ட தேதிகளில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள்!
தேசிய தேர்வு முகமை ஏற்கெனவே அறிவித்தபடி ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஜேஇஇ மெயின் தேர்வுக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டு விட்டதாகவும், நீட் தேர்வுக்கு விரைவில் நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/26-08-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக