Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

`அண்ணாமலை, இளைஞர்களுக்கு தேவையான ஸ்பிரிட் அண்ட் இன்ஸ்பிரேஷன்...!’ - வித்யாராணி வீரப்பன்

``அண்ணாமலை சேர்ந்திருப்பது தமிழக பா.ஜ.க-வுக்குப் பலம்’’ என்று வீரப்பனின் மகளும், தமழ்நாடு பா.ஜ.க-வின் மாநில இணைஞரணித் துணைத் தலைவருமான வித்யாராணி கருத்து தெரிவித்திருக்கிறார்.

கரூரைப் பூர்வீகமாகக்கொண்டவரும், கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி, பின் அந்த பதவியை ராஜினாமா செய்தவருமான அண்ணாமலை, பா.ஜ.க-வின் டெல்லி தலைமையகத்தில், அந்தக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் முரளிதரராவ் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார். கர்நாடகாவில் பணியாற்றும்போது அந்த மாநில மக்களால், `சிங்கம்’ என அழைக்கப்பட்டவர் அண்ணாமலை. கடந்த வருடம் தன்னுடைய ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொதுவாழ்வில் நுழைவதாகத் தெரிவித்தார். `விரைவில் அரசியலில் நுழைவேன்’ என, கடந்த சில மாதங்களாகத் தெரிவித்துவந்தார். `ரஜினி ஆரம்பிக்கவிருக்கும் புதிய கட்சியில் இணைவார்’ என்றும், `இல்லை... தமிழக பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவார்’ என்றும் பல்வேறுவிதமான கருத்துகள் வலம்வந்தன. இந்தநிலையில் இன்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்.

அண்ணாமலை ஐ.பி.எஸ்

அண்ணாமலையின் இந்த இணைவுக்கு பா.ஜ.க தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை அண்ணாமலைக்குத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ``மோடியைப் பிடிக்கும் எனச் சொன்னதற்கு காரணம் இதுதான்!'' - விளக்கும் முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை

இந்தநிலையில், தமிழக பா.ஜ.க-வின் இளைஞரணித் துணைத் தலைவராக, கடந்த காமராஜர் பிறந்தநாள் விழா முதல் பொறுப்பு வகித்துவரும் வீரப்பனின் மகள் வித்யாராணி இது குறித்துப் பேசினார்.

``ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி, நேர்மையான சில காரணங்களுக்காக அதிலிருந்து விலகி இன்று கட்சிப் பணியில் இணைந்திருக்கிறார். நான் அவரின் இன்டர்வியூக்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவற்றில், இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான `ஸ்பிரிட் அண்ட் இன்ஸ்பிரேஷன்' அவரிடம் நிறைய இருக்கின்றன. `மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்’ என்கிற தீர்மானம் அவரது பேச்சிலும் செயலிலும் தெரிகிறது . அதை நான் வரவேற்கிறேன். பி.ஜே.பி-யில் அவர் இணைந்திருப்பதை கட்சியின் பலமாகப் பார்க்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வமாக இருக்கிறேன்'' என்கிறார் வித்யாராணி.

வித்யாராணி கடந்த பிப்ரவரி மாதம், பா.ஜ.க-வின் தேசியப் பொதுச் செயலாளர் முரளிதரராவ் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/i-am-eager-to-work-with-annamalai-veerappans-daughter-vidyarani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக