இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை!
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மத்திய அரசு முன்னர் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துக்கும் இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு மையம் அனுமதி தர பரிந்துரைத்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இன்றுமுதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது. ``கொரோனா தடுப்பூசிகளே இல்லாமல் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளன. கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும்போது, மக்களுக்கு அதை செலுத்துவதில் ஏற்படும் நடை முறை சிக்கல்களை தெரிந்து கொள்வதற்காகவே இந்த ஒத்திகை நடைபெறுகிறது” என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் சென்னை, நீலகிரி, நெல்லை, கோவை, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 17 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
source https://www.vikatan.com/news/general-news/02-01-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக