இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா தொற்று குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ``விநாயகர் சதுர்த்திக்கு பொருள்களை வாங்குவதற்காக பல இடங்களில் கூட்டமாக மக்கள் அலைமோதினார்கள். வெளியே வராமல் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அறிவுறுத்தியும் யாரும் மதிக்கவில்லை.
அனைவரும் வெளியே கடைக்கு சென்று கும்பல் கும்பலாக கலந்து பொருட்களை வாங்கிச் சென்று கொண்டாடினார்கள். இதனால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்கும். இப்படி நோயை பரப்புவதால் ஒவ்வொரு தனிநபருக்கும் ஆயிரக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவிட வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு தனிநபருக்கும் மருத்துவர், செவிலியர், மருந்துகள், வெண்டிலேட்டர், மருத்துவமனை, படுக்கைகள் தேவைப்படுகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் சட்ட விதிகளை மீறுபவர்கள் எப்படி இலவச சிகிச்சையை கேட்க முடியும்? எதற்காக அரசிடம் வருகிறார்கள்? பணம் செலுத்தி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே?
Also Read: புதுச்சேரி: `70 பேரில் இருந்து 100 ஆக மாறும்!' - அதிகரித்த தொற்று; அச்சத்தில் கிரண் பேடி
நாங்கள் வரி செலுத்துகிறோமே என்று மக்கள் கேட்கலாம். அனைவரும் மறைமுக வரியைத்தான் செலுத்துகிறோம். ஆனால் நேரடி வரியை எவ்வளவு பேர் செலுத்துகிறார்கள்? நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சில கோடி பேர்கள் மட்டுமே உண்மையில் வரி செலுத்துகிறார்கள். மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் மக்களை நமது அரசு நிர்வகிக்க வேண்டியச் சூழல் நிலவுகிறது” என்று ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-why-do-people-who-do-not-follow-the-law-ask-for-free-treatment-kiran-bedi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக