Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

வடகொரியா: கோமாவில் அதிபர் கிம் ஜாங் உன்...ஆட்சிப் பொறுப்பில் இருப்பது யார்?

சில மாதங்களாகவே வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. `கிம்முக்கு இதய அறுவை சிகிச்சை நடந்து அது தோல்வியடைந்ததால், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார்' என்றெல்லாம் செய்திகள் உலவி வந்தன. `கிம் உயிரோடு இருக்கிறாரா என்பதே சந்தேகமாக உள்ளது' என்பது போன்ற செய்திகளையும் காண முடிந்தது.

இந்தநிலையில், வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தினக் கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொள்ளவில்லை. 2011-ம் ஆண்டு வடகொரியாவின் அதிபர் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து இந்த நிகழ்வில் தவறாமல் பங்கு கொள்ளும் கிம், இந்த ஆண்டு பங்கேற்கவில்லை என்ற செய்தி, அவர் உடல்நிலை குறித்த சந்தேகங்களை வலுப்படுத்தியது. இதைத் தொடர்ந்து கிம் குறித்த உண்மையை அறிந்துகொள்ள தென்கொரியா போராடியது.

Kim Jong-un

இந்த சர்ச்சைகள் எழுந்து இரண்டு வாரங்கள் கடந்த பின் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் சி.என்.என் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில், ``வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நலமாக இருக்கிறார். எங்கள் அரசாங்க நிலைப்பாடு உறுதியானது. நாங்கள் வடகொரியாவைக் கண்காணித்தவரை அங்கு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் எதுவும் கண்டறியப்படவில்லை" என்று கூறினார்.

Also Read: `அணு ஆயுதங்களை மேம்படுத்தும் வட கொரியா?’ - மீண்டும் பொதுவெளியில் தோன்றிய கிம் ஜாங் உன்

இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிபர் கிம், பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாகப் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியிடப்பட்டன. அதன்பின் ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், `சமீபத்தில் கிம் தொடர்பாக வடகொரிய அரசு வெளியிட்ட அனைத்துப் புகைப்படங்களும், வீடியோக்களும் போலியானவை' என்று தென்கொரியப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்திருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.

வடகொரியா கிம் ஜாங் உன் - கிம் யோ ஜாங்

Also Read: `பேனா வாங்கினால் கிறுக்கிப் பார்ப்பதுபோல், துப்பாக்கி வாங்கினால்..!' - கிம் ஜாங் உன்னின் கலாய்பீடியா

தற்போது தென்கொரிய முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சங் மின் `வடகொரிய அதிபர் கோமாவில் இருக்கிறார்' என்று கூறியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது...

முன்னதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன அழுத்தம் காரணமாக தமது சகோதரியிடம் பொறுப்புகள் சிலவற்றை ஒப்படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது அவர் கோமாவில் இருப்பதால்தான், அரசின் பொறுப்புகள் அனைத்தும் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி சர்வதேச அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/international/is-north-korea-leader-kim-jong-un-is-in-coma

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக