"வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்புமுனைகளைக் கொண்டது. வாழ்வில் எது சுவாரஸ்யம் என்று கேட்டால், வாழ்வது தான் சுவாரஸ்யமே என்பேன். அந்த விநாடியை வெற்றிகரமாக வாழ்ந்து கழிப்பதுதான். அதில் தோற்கிறோமோ, வெற்றி பெறுகிறோமோ, அது அடுத்த விஷயம். நான் சிறுவயதிலேயே எனத் தகப்பனாரிடம் கற்றுக் கொண்ட ஒரு ஆங்கில மந்திரச் சொல், 'Never Give Up'. இந்தச் சொல் பார்த்தால் மிகவும் சாதாரணமாகத்தான் தெரிகிறது. உண்மையில் நம்மால் அப்படி இருந்துவிட முடியுமா?! களமாடுவதுதான் முக்கியம். ஒரு பந்தயத்தில் வெற்றி, தோல்வி என்பது எப்பொழுதுமே இரண்டாவது விஷயம்தான். அந்தப் போட்டியைக் கடைசிவரை முடிக்க வேண்டும், விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடியாக என்னால் முடியும் எனக் கடைசி வரைக் களத்தில் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்."
வாழ்க்கை என்பது எது எனச் சொல் புதிது என்னும் கீழ்க்காணும் காணொலியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
source https://www.vikatan.com/arts/literature/ananda-vikatan-sol-puthithu-show-by-parveen-sulthana-about-living-the-life
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக