Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

``விஜய் சேதுபதியை வெச்சு ஏன் அந்த போட்டோஷூட்?!'' - போட்டோகிராபர் ராமசந்திரன்

``கும்பங்கோணம் பக்கத்துல வலங்கைமான் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பையன். ஊர்ல இருந்து சென்னைக்கு வர்ற பசங்களுக்கு இருக்குற கஷ்ட நஷ்டங்கள் எனக்கும் இருந்தது. தவிர்க்க முடியாத சில விஷயங்கள் நடந்தது. நினைச்சது சரியா நடக்கமா இருந்தது. இதுக்கு அப்புறம் எனக்குனு சில விளம்பர கம்பெனிகள் ஆரம்பிச்சு பண்ணிட்டு இருந்தேன். அப்போ, சில போட்டோகிராபர்ஸ் எடுத்த போட்டோஸ் க்ளையன்ட்ஸூக்கு பிடிக்காததனால நானே களத்துல இறங்கி போட்டோ எடுக்க ஆரம்பிச்சிட்டேன். முப்பது வருஷமா இந்த ஃபீல்ட்டுல இருக்கேன். 40 நாடுகளுக்கு மேல பயணம் செஞ்சிருக்கேன். நிறைய பிராண்ட் மற்றும் இதழ்கள்னு வேலைப் பார்த்துட்டேன். இருந்தாலும், எனகான தேடல் இன்னும் இருந்துக்கிட்டுதான் இருக்கு.''

``சென்னை டு மெட்ராஸ் கான்செப்ட் லாக்டெளன் காலத்துலதான் தோணுச்சா?"

சென்னை டு மெட்ராஸ்

``முதல்ல, என்னோட ஊடகத்துறை நண்பருக்கு போட்டோகிராபி பற்றி சொல்லி தர்றதுக்கு சென்னையை சுத்துனோம். அப்போ, சில வரலாற்று சிறப்புமிக்க பில்டிங்ஸ் பார்க்குறப்போ தனித்துவமா தெரிஞ்சது. ஏன்னா, நிறைய டிராவல் பண்ணியிருக்கேன். இப்படி போறப்போ அங்கேயிருக்குற இயற்கை அல்லது பில்டிங்ஸ் ரசிச்சுப் பார்ப்பேன். நிறைய மாடல்ஸ்கூட வேலை பார்த்திருக்குறதுனால, இவங்களைவிட இயற்கை எப்பவும் ஸ்பெஷலாவேதான் தெரியும். இப்படியிருந்தப்போ இத்தாலி ரோம் நகரத்துல கிடைக்குற ஃபீலை, சென்னை லாக்டெளன் காலத்துல பல பில்டிங்ஸ் கொடுத்துச்சு. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மவுன்ட் ரோடுனு எல்லாமே ரொம்ப அருமையா தெரிஞ்சது. இதெல்லாம் டச்சு மற்றும் கிரேக்க மக்கள் சேர்ந்து கட்டுன கலவை. இவ்வளவு அழகான இடத்தை இத்தனைக் காலம் மக்கள் கூட்டமிருந்து மறைச்சுட்டு இருந்திருக்காங்கனு தோணுச்சு. இப்போ இருக்குற சென்னையை பதிவு செய்யணும்னு தோணுச்சு. அதனால உடனே சென்னை டு மெட்ராஸ் வேலையை ஆரம்பிச்சிட்டேன். ஒவ்வொரு போட்டோல இருந்தும் இன்னொரு போட்டோ எடுக்க போறப்போவும் பக்கத்துல எந்த மாதிரியான பில்டிங்ஸ் இருக்குனு தேடிப் படிக்க ஆரம்பிச்சிட்டேன். ரிப்பன் பில்டிங், விக்டோரியா ஹால்னு தேடல் அதிகமாகிருச்சு.''

``எத்தனை போட்டோஸ் எடுத்திருப்பீங்க?"

ராமசந்திரன்

``ஐந்நூறு போட்டோஸூக்கு மேல இருக்கு. இப்போதைக்கு 450 போட்டோஸ் எடுத்து ஆல்பம் பண்ணியிருக்கோம். மெட்ராஸ் டே அன்னைக்கு விஜய் சேதுபதி, பார்த்திபன் மற்றும் `இந்து ராம்' கையால ரிலீஸ் பண்ணயிருக்கோம். மார்ச் கடைசில இருந்து இப்போ வரைக்கும் போட்டோஸ் எடுத்துட்டு இருக்கோம். காலையில இருந்து இரவு வரைக்கும் பில்டிங்ஸ் தேடித்தேடி எடுத்துட்டு இருந்திருக்கோம். மவுன்ட்ரோட்ல ஸ்பென்சர் ப்ளாசாவை எடுக்கலாம்னு நினைச்சிட்டு போவேன். அப்போ சுகுணா விலாஸ் கண்ணுக்குத் தெரியும். அப்புறம் எலக்ட்ரிக் தியேட்டர் தெரியும். இதுவே ரொம்ப பழமையான பில்டிங். இது யாருக்கும் தெரியாது. இப்படியே ஒவ்வொரு பில்டிங்ஸையும் தேடித்தேடி போனேன். மவுன்ட்ரோட்ல மட்டுமே பத்து முறைக்கு மேல போட்டோஸ் எடுத்திருப்பேன். இவ்வளவு இடத்துக்கும் போறதுக்கு எங்களுக்கு அனுமதி கிடைச்சது. இதை வெச்சிட்டு சென்னை முழுக்க லாக்டெளன் காலத்துல சுத்திக்கிட்டு இருக்கேன். டீசலுக்கு மட்டுமே 17,000 செலவு பண்ணியிருப்பேன்.''

சென்னை டு மெட்ராஸ்

``ஏன் பிளாக் அண்ட் ஒயிட்?!"

``இப்போ கோவிட் காலத்துல இருக்கோம். இதுவே ஒரு பிளாக் அண்ட் ஒயிட் காலம்தான். இந்த நேரத்துல எல்லாருமே பல வருஷத்துக்கு பின்னாடி போயிட்டு வரோம். 1940-ல வொர்க் ஃப்ரம் ஹோம் சிஸ்டம் இருந்திருக்கு. இப்பவும் அப்படித்தான் போயிட்டு இருக்கு. அதனால இந்த கலர் டோன்ல பதிவு செஞ்சேன். அதே மாதிரியே எல்லாருமே சென்னைல இருந்து மெட்ராஸ் காலத்துக்கு திரும்ப போயிருக்காங்க. அதனால, சென்னை டு மெட்ராஸ்னு பேர் வெச்சிட்டேன்.''

``விஜய் சேதுபதிகூட உங்க பயணம் பற்றி?"

விஜய் சேதுபதி

``சமீபத்துல, அவரை வெச்சு எடுத்திருந்த போட்டோ ஷூட் வைரலாகியிருந்தது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே என்னோட கேலரியை லான்ச் பண்ணியிருக்கார். டைம் கிடைக்குறப்போ பார்த்துப்போம். இந்த லாக்டெளன் நேரத்துல போட்டோகிராபிக்காக சுத்திட்டு இருந்தப்போ நிறைய மக்களை பார்க்குற வாய்ப்பும் கிடைச்சது. எளிமையான மக்களின் எமோஷன்ஸையா காட்டணும்னு நினைச்சேன். எளிமையான மனிதர்களின் அடையாளம் விஜய்சேதுபதி. அதனாலதான், அவர்கிட்ட போன் பண்ணி சொன்னேன். மேக்கப் எதுவும் இல்லாம வந்து நின்னார். போட்டோ ஷூட் பண்ணோம். எல்லோருக்கும் பிடிச்சதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம்.''



source https://cinema.vikatan.com/tamil-cinema/photographer-ramachandran-shares-his-chennai-to-madras-photography-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக