Ad

செவ்வாய், 4 மே, 2021

அள்ளிக் கொடுக்கும் வரதர்கள்... அட்சய திருதியை நாளில் நீங்களும் சங்கல்பிக்கலாம்!

பாற்கடலில் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன் தன் பக்தர்களைப் பாதுகாக்கவும் அவர்கள் வேண்டி விரும்பிய வரங்களை அள்ளித் தரவும் வரதராஜராக அருள்பாலிக்கும் திருத்தலங்கள் அநேகம். அதில் முக்கியமானவை பழைய சீவரம், காஞ்சிபுரம், ஆட்சிப்பாக்கம். இங்குள்ள 3 வரதர்களுமே விசேஷமானவர்கள், வரப்பிரசாதிகள்.
வரதராஜப் பெருமாள்

பழைய சீவரம் ஆதி வரதர்:

பாலாறு, வேகவதி,செய்யாறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தின் வடகரையில் அமைந்துள்ள கிராமம் பழையசீவரம். செங்கல்பட்டிலிருந்து காஞ்சீபுரம் செல்லும் சாலையில் பழைய சீவரம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள சிறிய மலைமேல் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. திருமகள் புரம், ஸ்ரீபுரி, ஸ்ரீபுரம், ஆதிகாஞ்சி, சீயபுரம், சீவரம், ஜீயர்புரம், விண்ணபுரம், பழைய சீவரம், ஜெயபுரம், திரிபுவன வீர சதுர்வேதி மங்கலம் என்றெல்லாம் போற்றப்படும் இந்த ஊரில் உள்ள ஆலயத்தின் கருவறையில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மேற்கு திருமுகமாக வீற்றிருகிறார்.

இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு பத்ம பீடத்தில் ஊன்றிய நிலையில் நான்கு கரங்களுடன் ஸ்ரீலட்சுமி தேவியை இடது தொடையின் மீது அமர்த்தி ஆலிங்கனம் செய்த வண்ணம் அமர்ந்துள்ளார் பெருமாள். 'பிரகலாதவரதன்' என்று போற்றப்படும் இந்த லட்சுமி நரசிம்ம ஸ்வாமியின் திருக்கோயிலில் இருந்துதான் அத்தி வரதர் எனும் மகாமூர்த்தம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பூமியில் முதன்முதலில் நரசிம்ம வடிவில் வரதராக தோன்றி நின்ற இடம் என்பதால் இங்கு பிரகலாதவரதர் 'ஆதி வரதர்' என்று போற்றப்படுகிறார். காஞ்சி வரதர் இன்றும் பாரிவேட்டை நாளில் பழைய சீவரத்துக்கு வந்து அருள்பாலிப்பது நடைபெறுகிறது.

காஞ்சி அத்தி வரதர்:

வைஷ்ணவ காஞ்சியில் வரதராஜர் பெருந்தேவி தாயாரோடு மூலவராக அருள்பாலிப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவருக்கு முன்பே பிரம்மனால் உருவாக்கப்பட்ட அத்தி வரதர் அனந்த சரஸ் திருக்குளத்தில் எழுந்தருளி பள்ளி கொண்டிருப்பதையும், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே அவர் குளத்தை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்வதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அத்தி வரதர் பள்ளி கொண்டபின், அத்தி வரதரின் மூல வடிவமாக வரதராஜர் எனும் தேவராஜ பெருமாளே இங்கு கருவறையில் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். ஆக, அத்திவரதரும் வரதராஜரும் இங்கே ஒரே வடிவமானவர்களே என்பது ஆன்றோர் வாக்கு. பிரம்மனின் கடும் தவத்துக்கு மெச்சிய பெருமாள் காஞ்சி வரதர் இங்கு நான்கு கரங்களுடன் அருள் வழங்கும் வள்ளலாக அத்தி வரதராக எழுந்தருளினார் என்கிறது தலபுராணம்.

ஆட்சிப்பாக்கம் அட்சய வரதர்

ஆட்சிப்பாக்கம் அட்சய வரதர்:

திருமாலை விட்டு நீங்கிய திருமகள் தங்கியிருந்து தவம்புரிந்த தலங்களில் ஒன்று ஆட்சிப்பாக்கம். இங்கு தான் திருமகள், திருமால் மண்ணுலகுக்கு ஸ்ரீனிவாசப் பெருமாளாகத் தோன்றிவிட்டார் என்பதை அறிந்து கொண்டார். அதனால் ஆனந்தம் கொண்டு சகல தேவர்களுக்கும் வரங்களை வாரி வழங்கினார்.இங்கு தான், குபேரன் தான் இழந்த நவநிதிகளையும் திரும்பப் பெற்றாராம். அதனால் இந்த ஊர் அட்சயபுரி, அளகாபுரி, விஜயபட்டினம் என்றெல்லாம் பெயர் பெற்றது. மேலும் திருவேங்கடவன் திருமலையில் எழுந்தருளிய பிறகு, திருமகளை மகிழ்விக்கும் விதமாக அவள் பூலோகத்தில் தங்கி தவம் செய்த தலங்களில் எல்லாம ஶ்ரீதேவி-பூதேவி சமேதராக எழுந்தருளி, அங்குள்ள அன்பர்களுக்குக் காட்சியளித்தார். அவ்வண்ணம் ஆட்சிபாக்கத்திலும் தேவியர் சமேதராக அருள்மிகு அட்சயவரதராக கலியுக வள்ளலாக எழுந்தருளினாராம். திருமகளும் கொடையில் சிறந்த பெருந்தேவித் தாயாராக இங்கு அருள்பாலிக்கிறார். ஆட்சியை இழந்த தனது பக்தனுக்கு அட்சய வரதர் ஆட்சியை மீட்டுக் கொடுத்த ஊர் என்பதால் இது ஆட்சிப்பாக்கம் என்றும் பெயர் கொண்டது. பெருமாள் வரங்களை அள்ளித் தரும் அட்சய வரதராகவும் தேவி சாம்ராஜ்ஜிய லட்சுமியாக பெருந்தேவி அன்னையாக வீற்றிருக்கிறாள்.

இந்த மூன்று வரதர்களையும் ஒரு சேர தரிசிப்பவர்கள் இந்திரனுக்கு நிகரான செல்வத்தையும் வருணனுக்கு நிகரான புகழையும் பெறுவார்களாம். மேலும் நீண்ட ஆயுளையும் நீங்காத ஆரோக்கியமும் கொண்டு வாழ்வார்களாம். எனவே இந்த அட்சய திருதியை நாளில் மானசீகமாக மனதிலேயே இந்த மூவரையும் வேண்டி அருள்பெறுவோம்!

அற்புதமான இந்த ஆட்சிப்பாக்கம் தலத்தில்தான், அட்சயதிருதியை (14.5.2021 - வெள்ளிக்கிழமை) அன்று ஶ்ரீலட்சுமி குபேர பூஜை சிறப்பாக நடைபெற வுள்ளது. குபேரனுக்கு இழந்த செல்வங்களை மீண்டும் அருளிய தலம், சாம்ராஜ்ய லட்சுமியின் சாந்நித்தியம் பொங்கிப் பெருகும் க்ஷேத்திரம், அட்சய வரதர் எனும் திருப்பெயரிலேயே பெருமாள் அருளும் ஆலயம் இது. ஆகவே, அட்சய திருதியை வழிபாட்டுக்கு மிகப் பொருத்தமானதும் விசேஷமானதும் அல்லவா?

லட்சுமி குபேரர்

அட்சய திருதியை நன்னாளில் இங்கு லட்சுமி குபேர பூஜையும் வாசகர்களுக்குச் சகல நன்மைகளும் செல்வ வளமும் பெருகும் பொருட்டு வில்வம் முதலான தளங்கள் மற்றும் பூக்களால் அட்சய அர்ச்சனையும் நடைபெறவுள்ளன. செல்வத்துக்கான சக்தி வாய்ந்த ஆறு ராஜ யோகங்கள் அமைந்த நாள் அட்சயதிருதியை என்கின்றன ஜோதிட நூல்கள். அற்புதமான இந்த நாளில், மிக உன்னதமான திருத்தலத்தில் நடைபெறும் சிறப்பு வைபவங்கள் பூஜைகளில் நீங்களும் சங்கல்பித்து திருவருள் பெறலாம்.

வாசகர்கள் கவனத்துக்கு...

ஆட்சிப்பாக்கம் அருள்மிகு அட்சய வரதராஜர் திருக்கோயிலில், அட்சயதிருதியை அன்று நிகழவுள்ள லட்சுமிகுபேர பூஜை மற்றும் அட்சய அர்ச்சனை வழிபாடுகளுக்கு வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணமாக `₹.500 மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், அவர்களின் பெயர் - நட்சத்திரம் கூறி உரிய சங்கல்பத்துடன் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குக் குங்குமம், லட்சுமிப் பிரசாதமாக வில்வம், குபேர ரட்சை ஆகியவை (30.5.2021 தேதிக்குள்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், கொரொனா பெருந்தொற்று பாதிப்புக் கட்டுப்பாடு விதிமுறைகளுடன் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி இந்தத் திருக்கல்யாண வைபவம் நிகழவுள்ளது. ஆகவே, வாசகர்கள் நேரில் தரிசிக்கவோ பங்கேற்கவோ இயலாத நிலையில், இந்த வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

சங்கல்ப முன்பதிவு விவரங்களுக்கு: 97909 90404

நீங்களும் இதில் கலந்துகொண்டு சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/gods/atchaya-thrithiyai-special-lakshmi-kubera-poojai-by-sakthi-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக