கர்லிங் ஹேர்ஸ்டைல், அசர வைக்கும் முகபாவனைகள், பெண் வேடம், ரொமான்ஸ், மிமிக்கிரி என்று விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ‘குக்கு வித் கோமாளி’யில் பலரைக் கவர்ந்த புகழ் இப்போது செம பிஸி. ஒவ்வொரு வார இறுதியில் ஒளிபரப்பாகும் இந்த ஷோவில் புகழுக்காகவே ஷோவை தவறாமல் கண்டு ரசிக்கும் ரசிகர்கள் ஏராளம்.
இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகவிருக்கும், குக்கு வித் கோமாளி - பொங்கல் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொள்கிறார். இதன் முதல் ப்ரோமோ நேற்று வெளியானது. ஒருபுறம் ரசிகர்கள், சிவகார்த்திகேயனின் வருகைக்கு ஹார்ட்டின்களை தெறிக்கவிட்டுக்கொண்டிருக்க, மறுபுறம் அதில் “புகழ் மிஸ்ஸிங்?” என்ற கமென்ட்களும் பறந்தன.
இதற்கிடையே அஜித்தின் 'வலிமை' படத்தில் புகழ் நடிக்கிறார், அதனால்தான் அவர் ஷோவுக்கு வரவில்லை என்ற செய்திகள் சோஷியல் மீடியாக்களில் பரவ, புகழிடமே என்னாச்சு என போன் அடித்தோம்.
“அது வெறும் புரளிங்க. நான் 'வலிமை' படத்துல நடிக்கல. அது சம்பந்தமா யாரும் இதுவரை என்கிட்ட பேசல. அதுக்குள்ள யாரு இதை கிளப்பிவிட்டாங்கன்னும் தெரியல. அவங்களைத்தான் நானும் தேடிக்கிட்டு இருக்கேன்!”
“அப்போ ஏன் இந்த வார ‘குக்கு வித் கோமாளி’யில் உங்களை காணவில்லை?"
“சந்தானம் சாரோட ஒரு புது படத்துல நடிச்சிக்கிட்டு இருக்கேன். அன்னைக்கு அதோட ஷூட்டிங்குக்குப் போயிட்டதுனாலதான் ‘குக்கு வித் கோமாளி’க்கு போக முடியாமப் போச்சு. இதுதான் உண்மையான காரணம். அதுக்குள்ள இப்படி ஒரு புரளியைக் கிளப்பிட்டாங்க” என்றார்.
ஆக, இந்த முறையும், அஜித் ரசிகர்களுக்கு 'வலிமை' அப்டேட் கிடைக்கவில்லை என்பதுதான் பெரும்சோகம்!
source https://cinema.vikatan.com/television/cooku-with-comali-pugazh-clarifies-about-acting-in-valimai-movie
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக