`உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணிக்கு இந்தியா தயாராகிக்கொண்டிருக்கிறது’ என்று சமீபத்தில் பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்தியாவைப் பொறுத்தவரை, ஆக்ஸ்ஃபோர்டின் கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்துவருகிறது. கோவாக்ஸின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனமும், எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசியை பைஸர் மற்றும் பயோ என்டெக் நிறுவனமும் தயாரித்துவருகின்றன. இந்த மூன்று நிறுவனங்களும் அவசரகாலப் பயன்பாட்டுக்கான அனுமதி கோரியிருந்தன.
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அனுமதி கோரிய நிறுவனங்களிடமிருந்து கூடுதல் தரவுகளைக் கேட்டிருந்தது. கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொறுத்தவரை இந்தத் தடுப்பூசியை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தை புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் பெற்றிருக்கிறது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கேட்ட கூடுதல் தகவல்களை சீரம் நிறுவனம் வழங்கியிருக்கிறது.
இந்தியாவில் கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகளைப் பயன்படுத்த இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி வழங்கியிருக்கிறார். இந்த அனுமதி வழங்கியதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன. அனுமதி வழங்கிய பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரியான வேணுகோபால் ஜி சோமனி, ``இந்தத் தடுப்பூசி 100 சதவிகிதம் பாதுகாப்பானது. இந்தத் தடுப்பூசிகளில் ஒரு சிறிய பாதுகாப்பு பிரச்னை என்றாலும், நாங்கள் ஒப்புதல் வழங்கியிருக்க மாட்டோம். அனைத்துத் தடுப்பூசிகளிலும் சில ஒவ்வாமை இருப்பது இயல்புதான்" என்று கூறினார்.
वैश्विक महामारी के खिलाफ भारत की जंग में एक निर्णायक क्षण!
— Narendra Modi (@narendramodi) January 3, 2021
@SerumInstIndia और @BharatBiotech की वैक्सीन को DCGI की मंजूरी से एक स्वस्थ और कोविड मुक्त भारत की मुहिम को बल मिलेगा।
इस मुहिम में जी-जान से जुटे वैज्ञानिकों-इनोवेटर्स को शुभकामनाएं और देशवासियों को बधाई।
தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ``தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியதன் மூலம் கொரோனா இல்லாத இந்தியா உருவாகப்போகிறது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட மருந்துக்கு ஒப்புதல் கிடைத்திருப்பது ஒவ்வோர் இந்தியனையும் பெருமையடையச் செய்யும். `தற்சார்பு இந்தியா’ என்ற கனவை நனவாக்கும் வகையில், நம் அறிவியல் சமூகம் செயல்பட்டுவருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு என் நன்றி. இந்தப் பேரிடர் காலத்திலும் தங்கள் பணிகளைச் செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், விஞ்ஞானிகள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நமது நன்றியைத் தெரிவிப்போம்" என்று தெரிவித்திருந்தார்.
மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். கோவாக்ஸின் தடுப்பூசியைப் பொறுத்தவரை அது, அதன் 3-ம் கட்ட பரிசோதனையில் இருக்கும் நிலையில் அந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியது எப்படி என்று சர்வதேச பயோ எத்திகல் சங்கத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட இந்தியாவின் சில முக்கிய மருத்துவ நிபுணர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். மேலும் `அரசு, தடுப்பூசிகள் நம்பகமானவை என்று எதை வைத்துக் கூறுகிறது?’ என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். தடுப்பூசி ஒப்புதலுக்காக நிபந்தனைகள் குறித்த தரவுகள் எங்கே என்றும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
`கோவாக்ஸின், கொரோனாவுக்கு எதிராக நல்ல நோய் எதிர்ப்பு திறனை வெளிப்படுத்துகிறது’ என்று வேணுகோபால் ஜி சோமனி குறிப்பிட்ட பின்னர், ஆல் இந்தியா டிரக் ஆக்ஷன் நெட்வொர்க் என்ற சுகாதார அமைப்பின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், ``இந்திய அரசு கோவாக்ஸினுக்கு அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கோவாக்ஸின் செயல்திறன் குறித்த தரவுகள் இல்லை. முறையாக ஆய்வு செய்யப்படாத தடுப்பு மருந்துக்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என்பது புரியவில்லை" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காங்கிரஸின் மூத்த தலைவரான ஆனந்த் சர்மா பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ``எந்த நாடும் இதுவரை மூன்றாவதுகட்ட பரிசோதனையை முடித்து, தரவுகளை ஆய்வு செய்து அனுமதி வழங்கவில்லை. கொரோனா தடுப்பு மருந்தில் கவனத்துடன் இருப்பது அவசியம். தரப்பட்டிருக்கும் தரவுகளின்படி 3-ம்கட்ட பரிசோதனை முடியவில்லை. அந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து முழுமையாக ஆராயப்படவில்லை. இந்த இரண்டுமே கட்டாயம். இந்த மருந்துகளை முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்போவதாகக் கூறப்படுகிறது. அதனால் அனைத்தையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ``இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கை குழப்பமாக இருக்கிறது. உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் புள்ளிவிவரங்கள், இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் இறுதி விவரங்களைக் கண்டிப்பாக இந்திய அரசு வெளியிட வேண்டும். அதோடு, இங்கிலாந்து மற்றும் இந்தியா கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை வெளிப்படையாக வெளியிடவேண்டும்" என்று பேசினார்.
The Covaxin has not yet had Phase 3 trials. Approval was premature and could be dangerous. @drharshvardhan should please clarify. Its use should be avoided till full trials are over. India can start with the AstraZeneca vaccine in the meantime. https://t.co/H7Gis9UTQb
— Shashi Tharoor (@ShashiTharoor) January 3, 2021
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், " ‘கோவாக்ஸின் இன்னும் மூன்றாம்கட்ட பரிசோதனையை முடிக்கவில்லை. அதற்கு முன்பாக அனுமதி வழங்குவது ஆபத்தானது. மூன்றாம்கட்ட பரிசோதனை முடியும் வரை கோவாக்ஸின் தடுப்பூசியைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன். அதுவரை, கோவிஷீல்டு தடுப்பூசியைப் பயன்படுத்தலாம்" என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் தலைவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, ``எந்த இந்தியப் பொருள்களையும் காங்கிரஸும், எதிர்க்கட்சிகளும் பெருமை கொள்ள மாட்டார்கள். எப்படிப் பொய்களைச் சொல்லி மக்களைக் குழப்பலாம் என்றுதான் பார்ப்பார்கள். முன்னர் ராணுவ வீரர்கள் விஷயத்தில் மட்டம் தட்டினர். தற்போது தடுப்பூசி விஷயத்தில் வந்துவிட்டார்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
Congress and the Opposition is not proud of anything Indian. They should introspect about how their lies on the COVID-19 vaccine will be used by vested interest groups for their own agendas.
— Jagat Prakash Nadda (@JPNadda) January 3, 2021
People of India have been rejecting such politics and will keep doing so in the future.
கொரோனா தடுப்பூசிகள் குறித்து பல்வேறு சர்ச்சைகளும், சந்தேகங்களும் எழுந்திருக்கும் நிலையில், எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, `` இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஒரே மாதிரியான அனுமதியை வழங்கவில்லை. சீரம் நிறுவனம் தயாரித்திருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிதான் முதன்மையாகப் பயன்படுத்தப்படும். பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கும் கோவாக்ஸின் தடுப்பூசியைத் துணை மருந்தாக இருப்பு வைத்துக்கொள்வோம். பரிசோதனை முழுமையாக முடிவடைந்தால் மட்டுமே கோவாக்ஸின் கொள்முதல் செய்யப்படும்" என்று கூறினார்.
கோவாக்ஸின் தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கும் நிலையில், அந்தத் தடுப்பூசியைத் தயாரித்த பாரத் பயோடெக் நிறுவன மேலாண் இயக்குநர் கிருஷ்ணா யெல்லா, ``கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கிடைத்திருப்பது, வைரஸ் தடுப்பூசிகள் தொடர்பான மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலகில் தேவைப்படும் அனைவருக்கும் இந்தத் தடுப்பூசியைக் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம். கோவாக்ஸின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், மிகவும் பாதுகாப்பானது என்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. தற்சமயம் இரண்டு கோடி கோவாக்ஸின் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த எண்ணிக்கையை 70 கோடியாக உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறோம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ``கொரோனா தடுப்பூசி தற்போது அரசியலாக்கப்படுகிறது. என் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் எந்தக் கட்சியிலும் இல்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். கோவாகஸின் தொடர்பான பரிசோதனையை நாங்கள் இந்தியாவில் மட்டும் மேற்கொள்ளவில்லை. அவை, இங்கிலாந்து உட்பட 12 நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன. மற்ற தடுப்பூசிகள் 60-70 சதவிகித பக்கவிளைவை ஏற்படுத்தும் நிலையில், கோவாக்ஸின் 10 சதவிகித பக்கவிளைவை மட்டுமே ஏற்படுத்துகிறது. கோவாக்ஸின் தடுப்பூசி 200 சதவிகிதம் பாதுகாப்பானது என நான் உறுதியாகக் கூறுகிறேன்" என்று தெரிவித்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/what-is-happening-in-corona-vaccine-approval-in-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக