நடிகர் சல்மான்கானின் சகோதரர்கள் அர்பாஸ் கான், சோஹைல் கான் மற்றும் அவரது மகன் நிர்வான்கான் ஆகிய மூன்று பேரும் கடந்த மாத இறுதியில் துபாயிலிருந்து மும்பை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மூன்று பேருக்கும் கொரோனா இல்லை என்று தெரியவந்தது. ஆனாலும், அவர்களிடம் ஒரு வாரம் ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், தங்களுக்குத்தான் கொரோனா இல்லையே என்று மூன்று பேரும் நேராக வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
துபாய் மற்றும் பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் சோதனையில் கொரோனா இல்லை என்றாலும், கட்டாயம் ஒரு வாரம் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், மூன்று பேரும் எதுவும் சொல்லாமல் தங்களது வீடுகளுக்குச் சென்றது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.
உடனே மாநகராட்சி அதிகாரிகள் மூவரின் வீடுகளுக்கும் சென்று விசாரித்தனர். அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் இருந்ததால் அவர்கள் மீது விதிகளை மீறியதாக போலீஸில் புகார் செய்யப்பட்டது. உடனே வீட்டில் அல்லாமல் வேறு இடத்தில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து முன்று பேரும் வசிக்கும் பாந்த்ரா பகுதியிலுள்ள தாஜ் லேன்ஸ் என்ற நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொள்வதாகத் தெரிவித்தனர்.
Also Read: ``சல்மான் கானுடன் `ராதே’, அடுத்து அசோக் செல்வன்!'' - மேகா ஆகாஷ் செம பிஸி!
உடனடியாக அவர்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விதிகளை மீறியதாக அவர்கள்மீது கார் ரோடு போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கிடையே பிரிட்டனிலிருந்து மும்பை வந்த ஐந்து பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
source https://www.vikatan.com/social-affairs/controversy/salman-khan-brothers-isolated-at-a-star-hotel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக