கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக்பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சியின் 'Bigg Boss 7 Grand Finale' இன்று இரவு நடைபெற்ற வருகிறது.
கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, பவா செல்லத்துரை, மாயா, ரவீனா உட்பட 18 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கினார்கள். ஒரு மாதம் கழித்து அர்ச்சனா, தினேஷ், அன்ன பாரதி, கானா பாலா, பிராவோ ஆகிய 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியில் உள்ளே நுழைந்தனர்.
இதில் அர்ச்சனா, மாயா, மணி, தினேஷ், விஷ்ணு போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் இருக்க விஷ்ணு, தினேஷ் என ஒவ்வொருவராக வெளியேறினர். மேடைக்கு வந்த அர்ச்சனா, மணி, மாயா மூவரில் மாயா வெளியேறினார். பின்னர் அர்ச்சனா, மணி இருவரின் கைகளைப் பிடித்து கொஞ்சம் போக்குக் காட்டி பரபரப்பாக்கிய கமல், அர்ச்சனாவின் கைகளை உயர்த்தி அர்ச்சனாவை 'Bigg Boss 7' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிவித்தார்.
இதையடுத்து பேசிய அர்ச்சனா, "நான் உள்ள வரும்போது இரண்டு வாரம்தான் இருப்பேனு நினைச்சேன். இந்த வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. என் மீது இவ்வளவு அன்பு இருக்கிறது. இவ்வளவு மக்கள் என்னை நேசிக்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு அறிவுரை வழங்கி என்னை வழி நடத்திய கமல் சாருக்கு ரொம்ப நன்றி. சக போட்டியாளர்கள் அனைவருக்கும் நன்றி. அவர்கள்தான் என்னை என்னிடம் அடையாளம் காட்டினார்கள். இந்த நேரத்தில் என்னை அரவணைத்து எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது பெற்றொருக்கு நன்றி." என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசினார்.
source https://cinema.vikatan.com/television/bigg-boss-tamil-7-tittle-winner-archanas-speech
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக