Ad

வெள்ளி, 1 ஜனவரி, 2021

கரூர்: கூலித் தொழிலாளி கீழே தள்ளிக் கொலை! - தம்பதிக்கு வலைவீச்சு

கரூர் அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிபறித்தபோது இடப்பிரச்னையில், கீழே தள்ளிவிட்டு கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். கூலித் தொழிலாளியைக் கீழே தள்ளிக் கொன்ற தம்பதியை போலீஸார் தேடி வருகின்றனர்.

வெங்கமேடு காவல் நிலையம்

கரூர் அருகே உள்ள நெரூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். கூலித்தொழிலாளியான கருப்பண்ணனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி இரண்டு பேருக்கும் தகராறு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

Also Read: கரூர்: செல்போன் வெடித்து மாணவர் பலி... அதிர்ச்சியில் தந்தையும் இறந்த சோகம்!

இந்நிலையில், கருப்பண்ணன் தனது வீட்டுக்கு குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அசோகனும், அவரது மனைவி செல்வியும் அதனை தடுத்துள்ளனர். இதனால், அவர்களுக்கும், கருப்பண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அசோக்கும், செல்வியும் சேர்ந்து கருப்பண்ணனை அடித்து கீழே தள்ளி விட்டதாகக் கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த கருப்பண்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கருப்பண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து தலைமையிலான போலீஸார், கருப்பண்ணன் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வெங்கமேடு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய அசோகன், செல்வி தம்பதியைத் தேடி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/karur-police-books-couple-in-murder-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக