நியூயார்க்கில், டைம்ஸ் சதுக்கம் வழமையான மக்கள் திரளை இழந்து வெறிச்சோடிக்கிடந்தது. பெய்ஜிங்கின் டிவி கோபுரத்தின் மேலிருந்து இவ்வருடம் எந்த கொண்டாட்டங்களும் இல்லை!
பட்டாசுகள் சிட்னியின் ஓபரா ஹவுஸுக்கு மேலே வானத்தில் உயர்ந்தாலும், கீழே உள்ள துறைமுகம் மனித சஞ்சாரமே இன்றி காலியாக இருந்தது!
ஜெர்மனியில் பொது இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவே பட்டாசு விற்பனை பல இடங்களில் தடை செய்யப்பட்டிருந்தது. விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு மிக இறுக்கமான சூழலில் புது வருடம் பிறந்தது.
கொண்டாட்டமான ஈஃபிள் டவர் மக்களின்றி தனிமையில் இருந்தது. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை கடும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்பட்டிருந்தது!
இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக தாக்க தொடங்கியுள்ள நிலையில் மக்கள் கூட்டம், கொண்டாட்டங்கள் ஏதும் இன்றி புது வருடம் பிறந்தது.
அதிக கோவிட்-19 இறப்புகளைப் பதிவுசெய்த இத்தாலியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடையாக காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.
தைவானின் தைபேயில் திட்டமிட்டபடி பட்டாசு வாணவேடிக்கைகள் நடைபெற்றாலும் பொது இடங்களுக்கு வருபவர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
2019-ல் கொரோனா வைரஸினால் முதல் முதலாக பாதிக்கப்பட்ட மத்திய சீன நகரமான வுஹானில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பெருமளவில் மக்கள் கூட்டம் வீதிகளில் இறங்கி 2021 வருகையை கொண்டாடியது.
source https://www.vikatan.com/ampstories/lifestyle/international/new-year-celebrations-across-the-globe
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக