‘வாழ்க்கை மிகவும் குறுகியது... பிரேக் த ரூல்ஸ். பாதுகாப்பான துறைமுகத்திலிருந்து வெளியேறி சுதந்திரமாக மிதக்கத் தொடங்குங்கள்’ - மார்க் ட்வைனின் பிரபலமான இந்த வரிகள்தான் கனடாவைச் சேர்ந்த நடீனுக்கான முன்னுரை.
எல்லைகள் கடந்து பயணிப்பதில் ஆண்களுக்கு இல்லாத சிக்கல்கள் எல்லாம் பெண்களுக்கு உண்டு. அவற்றையெல்லாம் முறியடிக்க தொடர்ந்து முயலும் பெண்களில் ஒருவர் 32 வயது நடீன். இதுவரை 55 நாடு களில் தன் தடத்தைப் பதித்திருக்கிறார். 2006-ம் ஆண்டு முதல் ‘ஹே நடீன்’ (Hey Nadine) என்ற யூடியூப் சேனலையும் தொடங்கி பயண வீடியோக்களைப் பதிவேற்றி வருகிறார்.
“நான் விரும்பும் பொழுதுபோக்கே என் கரியராகவும் மாறியதில் மிகப் பெரிய சந்தோஷம்” எனும் நடீன், விக்டோரியா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றிருக்கிறார்.
“எல்லாரையும் போலவே கார்ப்பரேட் நிறுவன பணியில் கால் பதித்தேன். வெகு சீக்கிரமே அந்த வேலை எனக்கு விருப்பமில்லாததாகிவிட்டது. பிரேக் எடுத்து எனக்குப் பிடித்த பயணங்களில் ஈடுபட நினைத்தேன்” எனும் நடீன், வொர்க்கிங் ஹாலிடே விசா பெற்று முதன்முதலில் நியூசிலாந்துக்குச் சென்றிருக்கிறார்.
அந்தப் பயணத்தில் அவர் சென்று வந்த இடங்கள் பற்றிய சிறிய வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். இவரது புதிய முயற்சி ஓராண்டிலேயே பிரபலமானது.
“யூடியூப் சேனலில் என் பயண வீடியோக் களுக்கு வருமானம் கிடைக்கத் தொடங்கியது. என் பயணங்களை ஸ்பான்சர் செய்யவும் சில நிறுவனங்கள் முன் வந்தன. முழு நேர டிராவ லராக மாறினேன்” எனும் நடீன் பயணத் துக்கான செலவுகளுக்காக ஆரம்பத்தில் ஹோட்டலில் வெயிட்டர் பணி போன்ற வேலைகளையும் செய்திருக்கிறார்.
நடீனுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்திருக்கிறது ஒரு பயணம். “தென் அமெரிக்காவின் ஈக்வேடார் பகுதிக்குச் சென்றிருந்தபோது என்னுடைய கேமரா பை திருட்டுப் போனது. அதில்தான் என் இரண்டு கேமராக்கள், செல்போன் என அனைத்தும் இருந்தன. அந்தப் பையிலிருந்த எந்தப் பொருளை வாங்குவதற்கும் அப்போது என்னிடம் பணம் இல்லை.
இனிமேல் என்னால் பயண வீடியோக்களை வெளியிட முடியாது என்று கிரவுட் ஃபண்டிங் இணையதளத்தில் பதிவிட்டேன். இரண்டே நாள்களில் நான் தொலைத்த அனைத்தையும் வாங்கப் போதுமான பணம் வந்து சேர்ந்தது. என்னைப் பின்தொடர்ந்தவரகளின் அன்பால் மட்டுமே அது சாத்தியமானது” என்பவர் தற்போது உலகின் டாப் டிராவலர்.
ஸ்கூபா டைவிங் போன்ற சாகச வீடியோக் களையும் இவர் சேனலில் பார்க்கலாம். தவிர, பயணம் தொடர்பான பேக்கிங் டிப்ஸ், சரும பராமரிப்பு மற்றும் அந்தந்தப் பகுதிகளின் ஃபுட் ரெவ்யூஸ் எனத் தன் சேனலில் வெரைட்டி காட்டுகிறார். 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்ஸ், 40 கோடிக்கும் அதிகமான வியூஸ் என டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறார் நடீன்.
“ நாம் பயணிக்கும் பாதைகள் எப்போதும் தந்திரமானவை. கடின உழைப்பும் அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டுமே வீடியோக் களுக்கான கன்டென்ட் கிடைக்கும். நீங்கள் மிகச்சிறந்த வீடியோ பர்சனாகவும் இருக்க வேண்டும்.
பயணத்தின் சந்தோஷத்தை அனுபவித் தாலும், அதை வீடியோவாக்கும் பிராசஸின் மீது எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும். அலட்சியமாகக் கையாளும் வீடியோக்கள் எப்போதும் தோல்வியிலேயே முடியும்” எனும் நடீன், தனியாகப் பல நாடுகளை வலம் வந்தவர் 2018-ல் இந்தியாவிலும் கால் பதித்திருக்கிறார். நவம்பர் மாதத்தில் காதலரைக் கரம் பிடித்திருக்கிறார் நடீன்.
“பயம், பணம் இந்த இரண்டும்தான் பயணம் செல்வதற்குத் தயங்க வைக்கும் காரணங்கள். பயத்தை, தொடர் பயணங் களின் மூலம் முறியடிக்கலாம். இரண்டாவது பிரச்னைக்கு சரியான திட்டமிடல் அவசியம். குறைந்த பட் ஜெட்டில் அருகிலிருக்கும் இடங்களைப் பார்த்துவிட்டு, பிறகு பெரிய பயணங்களுக்குத் திட்டமிடுவது நல்லது.
முக்கியமாக, பயணங்கள் எப்போதுமே பெர்ஃபெக்ட் டாக இருக்காது. பிரச்னை களைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் முன்னேறி னால் அந்தப் பிரச்னைகளே ஆச்சர்யங்களாக மாறலாம்”
- பயணக் காதலை நமக்குள்ளும் விதைக்கிறார் நடீன்.
source https://www.vikatan.com/news/women/travel-lover-nadine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக