மா.செ கூட்டத்தில் ஸ்டாலின்!
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. தற்போதே தீவிர பிரசாரங்களை தொடங்கிவிட்டன கட்சிகள். இந்த நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அக்கட்சி அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க வினர் வரத் தொடங்கினர்.
காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டம் முடிந்ததும், அந்த முக்கிய அறிவிப்பு குறித்து தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/news/general-news/20-12-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக