ஹைதராபாத்தில் நடந்துவந்த `அண்ணாத்த’ படப்பிடிப்பில் நடிகர் கலந்துகொண்டார். படக்குழுவைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஹைதராபாத்தில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்த ரஜினிக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அதேநேரம், ரத்த அழுத்த பாதிப்பால் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அவர் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ரஜினிகாந்த் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
Also Read: `மருத்துவ அறிக்கையால் அப்செட்?! ; ரத்த அழுத்தம் சீரானதும் டிஸ்சார்ஜ்’ - ரஜினிகாந்த் ஹெல்த் அப்டேட்
ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. அதேநேரம், நேற்றைய நிலையை ஒப்பிடுகையில் ரத்த அழுத்தம் குறைந்திருக்கிறது. அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கவலைப்படுமளவுக்கு உடல்நலக் குறைபாடு ஏதும் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.
அவருக்கு இன்று மேலும் சில பரிசோதனைகள் செய்யப்படவிருக்கின்றன. அதன் முடிவுகள் மாலையில் கிடைக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்க மருந்துகள் கொடுக்கப்பட்டுவருகின்றன. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டிருக்கிறார். ரஜினிக்கு முழுமையாக ஓய்வு தேவை என்பதால், அவரைப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. ரத்த அழுத்த சிகிச்சை, அவரது உடல்நிலை முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/politics/rajini-advised-to-have-complete-rest-says-hyderabad-apollo-hospital
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக