Ad

புதன், 9 டிசம்பர், 2020

கரூர்: காட்டன் நிறுவனத்தில் திடீர் தீ! - ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்

கரூரில் இயங்கிவரும் தனியார் காட்டன் நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.50 லட்சம் மதிப்பிலான மூலப்பொருள்கள் எரிந்து நாசமாகின.

காட்டன் நிறுவனத்தில் தீ விபத்து

கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வருகிறது விநாயகா என்ற தனியார் காட்டன் நிறுவனம். இந்த நிறுவனம் நடராஜன் என்பவருக்குச் சொந்தமானது.

Also Read: கரூர்: கனமழையில் இடிந்து விழுந்த 3 வீடுகள்! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம்

இந்த காட்டன் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன. வீடுகளில் பயன்படுத்தப்படும் மெத்தைகளில் பயன்படுத்தும் காட்டன் பஞ்சுகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையான விநாயகா காட்டன் நிறுவனத்தில், 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காட்டன் நிறுவனத்தில் தீ விபத்து

அப்போது, திடீரென பஞ்சுகள் உள்ள பகுதியில் இருந்து புகை கிளம்ப ஆரம்பித்ததால், பதறியபடி அங்குபோய் பார்த்தனர் ஊழியர்கள். பஞ்சு தீப்பிடித்து எரிவதைக் கண்ட அவர்கள், உடனடியாகத் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில், இரண்டு வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில், இயந்திரம், பஞ்சு, மூலப்பொருள்கள் என சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான மூலப்பொருள்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் உயிர்சேதம் எதும் ஏற்படவில்லை. விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/accident/fire-accident-in-karur-cotton-factory

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக