சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுபெறுவதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே தோனியின் பெயரோடு ஒரு காரின் பெயரும் ட்ரெண்ட் ஆனது. காரணம் சாக்ஷி தோனி. தோனி ஓய்வுபெறுவதாக அறிவித்த அதே இன்ஸ்டாகிராமில், சில மணி நேரங்களிலேயே அவரது மனைவி சாக்ஷியிடம் இருந்து ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் வந்தது. 'வெல்கம் ஹோம்... மிஸ்ஸிங் யூ மஹி' என அமெரிக்காவின் பிரபல கிளாஸிக் காரான ஃபயர்பேர்டின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். உடனடியாக, தோனியின் ரசிகர்கள் இந்தக் காரைப் பற்றி தேட ஆரம்பித்துவிட்டார்கள். தோனியின் கராஜில் புதிதாக சேர்ந்திருக்கும் இந்த கிளாசிக் காரில் அப்படி என்ன ஸ்பெஷல்?!
தோனி கார், பைக் பிரியர். புதுப்புது கார், பைக்குகளை வாங்குவதோடு மட்டுமல்லாமல் பழைய கிளாசிக், வின்டேஜ் கார், பைக்குகளின் கலெக்ட்டராகவும் இருக்கிறார் தோனி. இவரது கராஜுக்குள் ஏற்கெனவே ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ் 1 (Rolls-Royce Silver Shadow Series 1), நிஸான் 4W73 உள்ளிட்ட பல உயர்ரக கார்கள் இருக்கின்றன.
இந்நிலையில்தான் அமெரிக்காவின் Pontiac Firebird Trans Am காரை வாங்கியிருக்கிறார் தோனி. 1960-களில் Ford Mustang-கிற்குப் போட்டியாக, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த Firebird கார்களை களமிறக்கியது. Pontiac Firebird இக்காலகட்டத்தில் அறிமுகமாகிய மற்றுமொரு பவர்ஃபுல் காரான Chevrolet Camaro-வின் பல பாகங்களைக் கொண்டதாக இருந்தது. எல்லோரும் வாங்கக்கூடிய, காம்பேக்ட்டான, ஸ்டைலான, பவர்ஃபுல்லான கூபே அல்லது கன்வர்ட்டிபிள் கார்களைத்தான் போனி அல்லது மஸ்ஸில் கார்கள் என்று சொல்வார்கள். இந்தப் போனி அல்லது மஸ்ஸில் கார்கள் நீளமான முன்பக்கத்தையும், ரியர் வீல் டிரைவையும், மிகவும் குட்டியான டிக்கியையும் கொண்டிருக்கும்.
1967-ல் முதல் முறையாக இந்த போன்ட்டியாக் ஃபயர்பேர்ட் அறிமுகமாகி 2002 வரை தயாரிப்பில் இருந்தது. Pontiac Firebird ட்ரான்ஸ் அமெரிக்கன் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அதில் இருந்து பெறப்பட்ட பெயர்தான் Trans Am. Firebird Trans Am கார்கள், Ram Air IV என்றழைக்கப்படும் V8 என்ஜின் மற்றும் 4-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொண்டவை.
Also Read: தோனி இந்திய அணிக்குள் எப்படி வந்தார், அவரைக் கொண்டுவந்தது யார்?! #Dhoni
தோனி தற்போது வாங்கியிருக்கும் Firebird Trans Am வகை, 1969-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. V8 இன்ஜின் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்திறன் கொண்ட கார் இது. தோனி எவ்வளவு விலை கொடுத்து இந்த காரை வாங்கினார் என்று தெரியவில்லை. ஆனால், இதேபோன்ற மற்றுமொரு Pontiac Firebird Trans Am கார் கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற ஒரு கிளாசிக் கார் ஏலத்தில் 68.31 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது.
இப்போது விதவிதமாக, ரகரகமான கார்கள் வைத்திருக்கும் தோனியின் முதல் கார் ஹூண்டாய் சான்ட்ரோ. இதன்பிறகு இந்திய அணிக்குள் வந்ததுமே மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரை வாங்கினார் தோனி. யமஹா ஆர்எக்ஸ் 135 பைக்தான் தோனியின் முதல் பைக்.
கார்களைத்தவிர கவாஸாகி நின்ஜா H2, கான்ஃபிடரேட் X132 Hellcat, டுகாட்டி 1098, பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் போன்ற சர்வதேச பைக்குகளையும் வைத்திருக்கிறார். இதுத்தவிர ஆர்எக்ஸ்100, ராஜ்தூத் என அவரிடம் மொத்தமாக 44 பைக்குகள் இருக்கின்றன. கிரிக்கெட் விளையாடாதபோது இந்த வின்டேஜ், கிளாசிக் கார், பைக்குகளை ரீஸ்டோர் செய்வதுதான் தோனியின் பொழுதுபோக்கு!
source https://www.vikatan.com/automobile/motor/what-is-the-specialty-of-dhonis-new-classic-car
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக