Ad

சனி, 22 ஆகஸ்ட், 2020

ஓடிடி-யில் வெளியாகும் `சூரரைப் போற்று'... காரணம் பகிரும் சூர்யா!

ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படமும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
சூரரைப் போற்று

சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவான 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் கொரோனா லாக்டௌன் காரணமாக நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியானது. அதே சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பிலும் அவரின் நடிப்பிலும் உருவான 'சூரரைப் போற்று' திரைப்படமும் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வரும் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: OTT-க்கு வருகிறதா `ஜகமே தந்திரம்'... சூர்யாவின் `சூரரைப் போற்று' ஸ்டேட்டஸ் என்ன?

சுதா கொங்குரா இயக்கத்தில் 'ஏர் டெக்கான்' நிறுவனர் கோபிநாத்தின் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷராஃப் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே விஜய்யின் 'மாஸ்டர்' படமும் 'சூரரைப் போற்று' படமும் திரையரங்கில் வெளியாகவிருந்தன. ஆனால், கொரோனா லாக்டௌன் காரணமாக, திரையரங்குகள் எப்போது திறக்கும், திறந்தாலும் லாபகரமாகச் செயல்படுமா என்ற குழப்பம் நீடிப்பதால் விஜய்யின் 'மாஸ்டர்' படம் பொங்கலுக்குதான் ரிலீஸ் எனத் தெரிகிறது. 'சூரரைப் போற்று' படமும் பொங்கலுக்குதான் என நினைத்த நிலையில் தற்போது நேரடி ஓடிடி ரிலீஸ் என சூர்யா அறிவித்துள்ளார்.

Suriya Statement

இது குறித்து விரிவான விளக்கம் அளித்துள்ள சூர்யா, "பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும் கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படத்தைச் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கியக் கடமை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில் நடிகராக இல்லாமல் தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்" என விளக்கம் அளித்துள்ளார்.

கூடுதலாக, இந்தத் திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு, 'ஐந்து கோடி ரூபாய்' பகிர்ந்தளிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/suriyas-soorarai-pottru-to-have-a-direct-ott-release

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக