தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் அதிர்ஷ்டராஜா (37). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சொந்தமாக பொன்மணம் என்ற எண்ணெய் ஆலை மற்றும் தனியார் நிறுவன பாமாயில் எண்ணெய் விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பாமாயிலை சொந்த பிராண்ட்டில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக இரண்டு இணையதள முகவரிகளில் தனது சுயவிவரங்களை பதிவு செய்திருந்தார். மேலும் அந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருந்த வாட்ஸ்-அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது 5 மெட்ரிக் டன் அளவிற்கு ஒப்பந்தம் தயார் செய்து அனுப்புமாறு அதிர்ஷ்ட ராஜாவுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதனடிப்படையில், அதிர்ஷ்டராஜா முதற்கட்டமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் கொரோனா காலம் என்பதால் கப்பல் மூலமாகவே எண்ணெய் அனுப்பப்படும். குறைந்தது 50 மெட்ரிக் டன் அளவு ஆர்டர் செய்ய வேண்டும் என மெயில் வந்துள்ளது. இதனைக் கண்ட அதிர்ஷ்ட ராஜா 75 மெட்ரிக் டன் எண்ணெய் ஆர்டர் செய்து 7 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். அடுத்தபடியாக கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும். நிறுவன மேலாளர் மாறியதால் கூடுதல் பணம் வேண்டும் என படிப்படியாக மொத்தம் 60 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை இரண்டு மாதங்களில் அனுப்பி உள்ளார் அதிர்ஷ்ட ராஜா. அதற்கு அடுத்த படியாக எந்த ஒரு இ-மெயிலும் வரவில்லை எண்ணெய்யும் வரவில்லை.
இதன்காரணமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டுவந்த சைபர் கிரைம் போலீஸாரிடம் அதிர்ஷ்ட ராஜா புகார் அளித்தார். அதிர்ஷ்ட ராஜாவின் இ-மெயிலுக்கு வந்த தகவலைக் கொண்டு விசாரணையை துவங்கப்பட்டு சைபர் கிரைம் ஆய்வாளர் அரங்கநாயகி தலைமையிலான போலீஸார், டெல்லி சென்று ஐவரி நாட்டை சேர்ந்த கோமே ஆர்தர் சில்வஸ்டர் என்ற இளைஞரைக் கைது செய்தனர். இதையடுத்து அவரை தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை சைதாபேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.
source https://www.vikatan.com/news/crime/foreign-youth-arrested-for-fraud-in-business
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக